Site icon Holy Temples

அருள்மிகு ஐராவதேஸ்வரர் கோயில், தாராசுரம்

கோயிலின் சிறப்புகள்:

      இத்தலத்தில் இறைவன் ஐராவதேஸ்வரர் என்ற திருநாமத்துடன் வீற்றிருந்து அருள்புரிகிறார். தஞ்சை பெரிய கோயில் போலவே சிற்பங்களை கொண்ட இக்கோயிலும் சோழர்களால் கட்டபெற்ற கொயிலேயாகும். ஒரு சமயம் இந்திரனது பட்டத்து யானையாகிய ஐராவதம், தலைக்கனம் ஏறி துர்வாச முனிவரிடம் அலட்சியாக நடந்து கொண்டது. துர்வாச முனிவர்  கோபத்துக்கும், சாபத்துக்கும் பெயர் பெற்றவர். ஐராவதத்தின் அகங்காரத்தை அறிந்து சாபம் கொடுத்து விட்டார். சாபம் பெற்ற ஐராவதம் தனது பெருமையை இழந்து, நிறம் இழந்து காட்டானையாக சுற்றித் திரிந்தது. இந்த சந்தர்ப்பத்தில் தாராசுரம் எம்பெருமானை அன்போடு வழிபட்டு இறைவன் அருளாலும், கருணையினாலும் பழைய உருவை எய்தி, தனது அகங்காரத்தை விட்டொழித்தது. ஐராவதத்திற்கு அருளிய சிவன் ஆதலால் ஐராவதேஸ்வரர் அன்று அழைக்கப்படுகிறார். இக்கோயில் யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட மூன்று சோழர் காலத்து கோயில்களில் ஒன்றாகும். மற்றவை தஞ்சை பெரிய கோயில் மற்றும் கங்கைகொண்டசோழபுரம் ஆகும். தற்போது இக்கோயில் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை கட்டுப்பாட்டில் இயங்குகிறது. 

 

 பலன்கள்:

 இத்தலத்து இறைவனை வேண்டினால் சாபம் விமோசனம் கிடைத்து, சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. 

 

இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:

 கும்பகோணதிலிருந்து தஞ்சாவூர் செல்லும் சாலையில் 5KM தொலைவில் இக்கோயில் உள்ளது. கும்பகோணதிலிருந்து ஏராளமான பேருந்துகள் உள்ளன. 

 

தங்கும் வசதி:

 கும்பகோணத்தில் தங்கி அங்கிருந்து செல்லலாம். கும்பகோணத்தில் ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன. 

 

 கோயில் திறந்திருக்கும் நேரம்:

 காலை 7.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை

 மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை 

 

கோயில் முகவரி: 

 அருள்மிகு ஐராவதேச்வரர் திருக்கோயில் தாராசுரம், கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம்.

இந்த பதிவை பகிர:
Exit mobile version