Site icon Holy Temples

அருள்மிகு கைலாசநாதர் கோயில், திடியன் மலை

கோயிலின் சிறப்புகள்:

     இத்தலத்தில் இறைவன் கைலாசநாதர் என்ற திருநாமத்துடன் வீற்றிருந்து அருள்புரிகிறார். இம்மலையை சுற்றி அணைத்து தெய்வங்களும் வீற்றிருப்பதாக நம்பப்படுகிறது.  தமிழகத்தில் எங்‌குமே இல்லாதபடி, இங்கு மட்டுமே காசியில் இருந்து கொண்டு வரப்பட்ட தட்சிணாமூர்த்தி பதினான்கு சித்தர்களுடன். நந்தியின் மீது அமர்ந்த நிலையில் இரண்டரை அடி உயரத்தில் வீற்றிருந்து காட்சி தருகிறார். மிகவும் அபூர்வமான அனைத்து நட்சத்திரங்களுக்கும் பொருந்தக்கூடிய ஐந்து மரங்களில் ஒன்றான நெய்கொட்டான் மரத்தினை தலவிருட்சமாகக் கொண்ட திருத்தலம் இதுவாகும். திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல இயலாதவர்கள், இங்குள்ள கைலாசநாதரை பூஜித்துவிட்டு, திடியன் மலையினைச் சுற்றி வர, திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் எம்பெருமானை வணங்கிய பலனை அடையலாம் என்பதால் இத்தலம் தென் திருவண்ணாமலை என்றும் அழைக்கப்படுகிறது. இது அகத்திய முனிவரால் வழிபட்ட தலம் என்பது இத்தலத்தின் மேலும் ஒரு சிறப்பாகும். 

பலன்கள்:

நேரம் சரியில்லை என புலம்புபவர்களும், எதிர்காலம் குறித்து அச்சம் ‌ கொண்டோரும், கிரக தோஷங்கள் உள்ளவர்களும் இத்தலத்தி்ல் வீற்றுள்ள தட்சிணாமூர்த்தியையும் வணங்கிட அவை நிவர்த்தியடையும் என்பது நம்பிக்கை. 

இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:

மதுரையிலிருந்து 33 KM தொலைவிலும், உசிலம்பட்டியிலிருந்து 15 KM தொலைவில் இக்கோயில் உள்ளது. மதுரை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து நகரப் பேருந்துகள் உள்ளது.

தங்கும் வசதி:

மதுரையில் தங்கி அங்கிருந்து செல்லலாம். மதுரையில் ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன.

கோயில் திறந்திருக்கும் நேரம்:

காலை 7.00 மணி முதல் மதியம் 10.00 மணி வரை

மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை 

கோயில் முகவரி: 

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், திடியன் மலை (உசிலம்பட்டி) – மதுரை மாவட்டம்.

தொலைபேசி: 

04552 – 243 235, 243 597, 9442524323

இந்த பதிவை பகிர:
Exit mobile version