Site icon Holy Temples

அருள்மிகு நாகநாதர் திருக்கோயில், கீழப்பெரும்பள்ளம்

இறைவன்: நாகநாதர் 
இறைவி: சௌந்திரநாயகி
தீர்த்தம்: நாக தீர்த்தம்
தல விருட்சம்: மூங்கில்

கோயிலின் சிறப்புகள்:

         இத்தலம் நவகிரஹ தலங்களில் கேது பகவானுக்கு உரியது. இத்தலத்தில் அனுகிரக விநாயகர் உள்ளார். இங்கு கேதுபகவானுக்கு தனி சன்னதி உள்ளது. சிம்ம பீடத்தில் பாம்பு தலையுடன் மனித உடலுடன் நாகநாதரை இருகரம் கூப்பி வழிபடும் கோலத்தில் அனுகிரகம் செய்கிறார். முதலில் நாகநாதரையும், சௌந்தரநாயகி அம்மையையும் வழிபட்டு பின்னர் கேது பகவானை வழிபடவேண்டும். கேதுவினால் பாதிக்க பட்டவர்களுக்கு இவர் நல்லதை அருளுவார்.

இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:

மயிலாடுதுறையிலிருந்து 20.கி.மீ. தொலைவில் இக்கோயில் உள்ளது. சீர்காழியிலிருந்தும், மயிலாடுதுறையிலிருந்தும் பேருந்துகள் உள்ளன.

தங்கும் வசதி:

சீர்காழி அல்லது மயிலாடுதுறையில் தங்கி அங்கிருந்து செல்லலாம். ஏராளமான தாங்கும் விடுதிகள் உள்ளன.

கோயில் திறந்திருக்கும் நேரம்:

காலை 7.00 – 12.00 மற்றும் மாலை 4.00 – 8.00

கோயிலின் முகவரி:

அருள்மிகு நாகநாதர் திருக்கோயில், கீழப்பெரும்பள்ளம், மயிலாடுதுறை மாவட்டம் 609105.

தொலைபேசி:

9500416171

இந்த பதிவை பகிர:
Exit mobile version