கோயிலின் சிறப்புகள்:
இக்கோயில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு முக்கியமான காளி கோயிலாகும். இங்கு காளி தனது வலது காலை மடித்து அமர்ந்து, எட்டு கைகளுடன் காலுக்கு கீழே அசுரனை வதம் செய்தபடி காட்சி தருகிறாள். கொலை, கொள்ளை, கற்பழிப்பு, நம்பிக்கை துரோகம், வீண்பழி, அவமரியாதையால் பாதிக்கப்பட்டோர், செய்யாத தவறுக்கு தண்டனைக்கு உள்ளானோர் தங்களுக்கு நீதி கிடைக்க இங்கு அம்பாள் சன்னதியில் காசு வெட்டிப்போட்டு வழிபடுகின்றனர். இந்த அநியாயங்களை எல்லாம் அம்பிகை தட்டிக்கேட்டு, குற்றவாளிகளைத் தண்டிப்பாள் என்பது நம்பிக்கை. இக்கோயிலில் அய்யனாரும் வெட்டுடையா அய்யனார் என்ற பெயரில் தனி சந்நிதியில் வீற்றிருக்கிறார். தினமும் காலையில் அய்யனார் மீதும், மாலையில் காளியம்மன் மீதும் சூரிய ஒளி விழும்படி கோயில் அமைந்துள்ளது சிறப்பாகும்.
பலன்கள்:
பிரச்னையால் பிரிந்துவிட்டு மீண்டும் சேர விரும்பும் தம்பதியர், உறவினர், சகோதரர்கள் இங்கு “கூடுதல் வழிபாடு’ என்னும் பிரார்த்தனை செய்தால் மீண்டும் சேர்ந்து விடுவர் என்பது நம்பிக்கை.
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
சிவகங்கையில் இருந்து காளையார்கோவில் செல்லும் வழியில் 12 KM தொலைவில் கொல்லங்குடி உள்ளது. இவ்வூரில் இருந்து 2 கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம். கொல்லங்குடியிலிருந்து ஆட்டோ வசதிகள் உள்ளன.
தங்கும் வசதி:
அருகிலுள்ள சிவகங்கையில் தங்கி அங்கிருந்து செல்லலாம். சிவகங்கையில் ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை, பவுர்ணமி நாட்களில் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்.
கோயில் முகவரி:
அருள்மிகு வெட்டுடையா காளி திருக்கோயில்,
கொல்லங்குடி வழி, விட்டனேரி போஸ்ட்,
அரியாக்குறிச்சி, சிவகங்கை மாவட்டம் – 623 556
தொலைபேசி:
90479 28314, 93633 34311