Site icon Holy Temples

அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், திருஅன்னியூர்

இறைவன்: ஆபத்சகாயேஸ்வரர்                       
இறைவி: பெரியநாயகியம்மை  
தீர்த்தம்:  வருண தீர்த்தம் 
பாடியோர்: அப்பர், சம்பந்தர்     

கோயிலின் சிறப்புகள்:

         தேவார பாடல் பெற்ற காவிரி வடகரை ஆலயங்களில் 22 வது ஆலயம். சூரியன், வருணன், அக்கினி தலமென்பது ஐதிகம். சங்ககாலத்தில் அன்னி, அன்னி மிஞிலி ஆகிய பெருமக்கள் வாழ்ந்துவந்த ஊர் இது.  இவர்களது பெயரால் அமைந்த ஊர் இது. .

மன்மதனை எரித்த சிவபெருமானை வேண்டி அவரது மனைவி ரதிதேவி தன் கணவன் உயிருடன் வர வேண்டி தவம்இருந்த தலம் . தவத்திற்கு மெச்சி மன்மதனை மன்னித்து உயிர்கொடுக்க இருவரும் தம்பதிகளாய் வழிபட்ட தலம். இங்கு இரண்டு தக்ஷிணாமூர்த்தி சன்னதிகள் அருகருகே அமைந்து உள்ளது. 

தேவாரம்:   

மன்னி யூரிறை சென்னி யார்பிறை
அன்னி யூரமர் மன்னு சோதியே

இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:

மயிலாடுதுறையில் இருந்து காளி வழியாக மணல்மேடு செல்லும் வழியில் 11.கி.மீ.  தொலைவில் இக்கோயில் உள்ளது. மயிலாடுதுறையில் இருந்து காரிலோ அல்லது ஆட்டோவிலோ செல்லலாம். 

தங்கும் வசதி:

மயிலாடுதுறையில் தங்கி அங்கிருந்து செல்லலாம். 

கோயில் திறந்திருக்கும் நேரம்:

காலை 7.00 – 10.00 மற்றும் மாலை 5.00 – 7.00

கோயிலின் முகவரி:

அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், திருஅன்னியூர் (பொன்னூர்), பாண்டூர் அஞ்சல், நீடூர் வழி, மயிலாடுதுறை மாவட்டம் 609203.

தொலைபேசி:

ரவிகுருக்கள்:  04364 -250758, 250755, 9994686973

இந்த பதிவை பகிர:
Exit mobile version