Site icon Holy Temples

அருள்மிகு கல்யாணசுந்தரேஸ்வரர் திருக்கோயில், திருவேள்விக்குடி

இறைவன்: கல்யாணசுந்தரேஸ்வரர்                        
இறைவி: பரிமளசுகந்தநாயகி அம்மன்  
தீர்த்தம்:  சுந்தர தீர்த்தம், காவிரி 
பாடியோர்: அப்பர், சம்பந்தர்     

கோயிலின் சிறப்புகள்:

         தேவார பாடல் பெற்ற காவிரி வடகரை ஆலயங்களில் 23 வது ஆலயம்.  சிவபெருமானின் திருக்கல்யாண வேள்வி நடந்த தலமாதலின் இப்பெயர் பெற்றது. இத்தலம் திருத்துருத்தியோடு சேர்த்துப் பாடப்பெற்றிருக்கிறது. இறைவர் பகற்காலத்தில் வேள்விக் குடியிலும், இரவில் திருத்துருத்தியிலும் (குத்தாலம் ) எழுந்தருளியிருப்பதாகப் பதிகத்தால் அறியக்கிடக்கின்றது. இத் திருக்கோயிலைக் கருங்கல்லால் கட்டியவர் உத்தம சோழனது தாயாராகிய செம்பியன்மாதேவியாராவர். சிவபெருமானின் தோழர் சுந்தரர் குஷ்டம் நீங்கிய தலம். அகத்தியர் வாதாபியை கொன்ற சாபம் நீங்கிய தலம். பிள்ளையார் தனக்கு தானே திருமண சடங்கின் போது பூஜை செய்ததலம் . இறைவிக்கு இடப்பாகம் தந்த தலம் . திருமண தலமாதலால் கொடிமரம், நவகிரகங்கள் இல்லை.

தேவாரம்:   

மூப்பதும் இல்லை பிறப்பதும்
இல்லை இறப்பதில்லை
சேர்ப்பது காட்டகத் தூரினு
மாகச்சிந் திக்கினல்லால்
காப்பது வேள்விக் குடிதண்
துருத்திஎங் கோன்அரைமேல்
ஆர்ப்பது நாகம் அறிந்தோமேல்
நாம்இவர்க் காட்படோமே

இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:

மயிலாடுதுறையில் இருந்து மாப்படுகை வழியாக குத்தாலம் செல்லும் வழியில் 8.கி.மீ.  தொலைவில் இக்கோயில் உள்ளது. மயிலாடுதுறையில் இருந்து பேருந்துகள் உள்ளன. 

தங்கும் வசதி:

மயிலாடுதுறையில் தங்கி அங்கிருந்து செல்லலாம். 

கோயில் திறந்திருக்கும் நேரம்:

காலை 6.00 – 12.00 மற்றும் மாலை 4.00 – 8.00

கோயிலின் முகவரி:

அருள்மிகு கல்யாணசுந்தரேஸ்வரர்  திருக்கோயில், திருவேள்விக்குடி, குத்தாலம் வழி, மயிலாடுதுறை மாவட்டம் 609301.

தொலைபேசி:

ஆர். வைத்தியநாதகுருக்கள்:  04364 -235462,  235225,  9942239089

இந்த பதிவை பகிர:
Exit mobile version