Site icon Holy Temples

அருள்மிகு குந்தளேஸ்வரர் திருக்கோயில், திருக்குறக்காவல்

இறைவன்: குந்தளேஸ்வரர்                   
இறைவி: குந்தளநாயகி அம்மன் 
தீர்த்தம்: பழவாறு  
பாடியோர்: அப்பர்  

கோயிலின் சிறப்புகள்:

         தேவார பாடல் பெற்ற காவிரி வடகரை ஆலயங்களில் 28 வது ஆலயம்.   ஆஞ்சநேயர்  சன்னதி,   சிவன் சன்னதிக்கு  எதிரே உள்ளது.  இவரை சிவ பக்த ஆஞ்சநேயர் என்று அழைக்கிறார்கள்.  இன்றும் வருடத்தில் ஒருநாள் இரண்டு குரங்குகள் கோயிலுக்கு வருகிறதுவந்தவுடன் குருக்கள் கோயிலை திறந்து  வைத்து  விட்டு வெளியே வந்துவிடுகிறார்பின்பு அந்த குரங்குகள் கோயிலுக்கு உள்ளே சென்று சிவ  பூஜை செய்கின்றனஇன்றும்  நடைபெறும்  அதிசயம்.

ராவணனை கொன்ற தோஷம் நீங்க ராமேஸ்வரத்தில் ராமர் அனுமன்   லிங்கம் கொண்டு வர நேரம் ஆனதால் சீதை மண்ணால் செய்த  லிங்கத்தை ஸ்தாபித்து வழி படுகிறார். இதை அறிந்த அனுமன் அந்த லிங்கத்தை கட்டி இழுக்க, சிவ  அபராதம் ஏற்பட்டதை போக்க  இந்த கோயிலுக்கு வந்து தோஷம் நீங்க பெற்றார். ஆஞ்சநேயர்  தனது  குண்டலத்தையும்  கழற்றி  சிவனுக்கு   படைத்ததால்  இறைவன்  குண்டலகேசி  என்று பெயர் பெற்றார். 

தேவாரம்:   

மரக்கொக் காமென வாய்விட் டலறிநீர்
சரக்குக் காவித் திரிந்தய ராதுகால்
பரக்குங் காவிரி நீரலைக் குங்கரைக்
குரக்குக் காவடை யக்கெடுங் குற்றமே

இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:

மயிலாடுதுறையில் இருந்து மணல்மேடு செல்லும் சாலையில் 10.கி.மீ. தொலைவில் உள்ள பட்டர்வதியில் இருந்து 1.கி.மீ. தொலைவில்  இக்கோயில் உள்ளது. மயிலாடுதுறையில் இருந்து பேருந்துகள் உள்ளன. காரிலோ ஆட்டோவிலோ செல்வது சிறந்தது. 

தங்கும் வசதி:

மயிலாடுதுறையில் தங்கி அங்கிருந்து செல்லலாம். 

கோயில் திறந்திருக்கும் நேரம்:

காலை 6.00 – 12.00 மற்றும் மாலை 4.00 – 8.00

கோயிலின் முகவரி:

அருள்மிகு  குந்தளேஸ்வரர் திருக்கோயில், திருக்குறக்காவல், மயிலாடுதுறை மாவட்டம் 609201.

தொலைபேசி:

நடராஜ குருக்கள்   04364 258785, 9843082197

இந்த பதிவை பகிர:
Exit mobile version