Site icon Holy Temples

அருள்மிகு லட்சுமிபுரீஸ்வரர் திருக்கோயில், திருநன்றியூர்

இறைவன்: லட்சுமிபுரீஸ்வரர்               
இறைவி: உலகநாயகி 
தீர்த்தம்: லட்சுமி தீர்த்தம்  
பாடியோர்: திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் 

கோயிலின் சிறப்புகள்:

         தேவார பாடல் பெற்ற காவிரி வடகரை ஆலயங்களில் 19 வது ஆலயம். திருமகள் வழிபட்டு நிலைபேறு எய்திய தலம். சோழன் ஒருவன் திருவிளக்கிட்டுத் தினந்தோறும் வழிபட்டு வந்தான். அவன் கொண்டுவந்த திரி ஒருநாள் நின்றுவிடவே, சிவலிங்கத்தினின்றும் ஒரு சோதி தோன்றி, அவன் வழிபாட்டிற்கு இடையூறு உண்டாகாமல் உதவியது. அதனால் திரிநின்றவூர் ஆயிற்று. அது இப்போது திரு நின்றவூர் என வழங்குகின்றது. பரசுராமன் நின்றியூரை இறைவற்கும், பக்கத்திலுள்ள 360 வேலி நிலத்தை வேதியர்கட்கும் அளித்து வழிபட்டான் என்பது புராண வரலாறு. இதனையே சுந்தரர் தேவாரம் தக்கேசி மூன்றாம்பாடல் குறிப்பிடுகிறது. அடுத்த பாடலில், பசு பால்சொரிந்து அபிஷேகித்து வந்ததாகவும் ஒரு வரலாறு குறிக்கப் பெற்றுள்ளது. இது தருமை ஆதீன கோயிலாகும். 

தேவாரம்:   

புற்றி னாரர வம்புலித் தோல்மிசைச்
சுற்றி னார்சுண்ணப் போர்வைகொண் டார்சுடர்
நெற்றிக் கண்ணுடை யாரமர் நின்றியூர்
பற்றி னாரைப்பற் றாவினை பாவமே

இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:

மயிலாடுதுறையில் இருந்து சிதம்பரம் செல்லும் வழியில் 9 கிலோமீட்டர் தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. மயிலாடுதுறையில் இருந்து ஏராளமான பேருந்துகள் உள்ளன. 

தங்கும் வசதி:

மயிலாடுதுறையில், வைத்தீஸ்வரன் கோயிலில் தங்கி அங்கிருந்து செல்லலாம். 

கோயில் திறந்திருக்கும் நேரம்:

காலை 6.00 – 11.00 மற்றும் மாலை 4.00 – 8.00

கோயிலின் முகவரி:

அருள்மிகு  லட்சுமிபுரீஸ்வரர் திருக்கோயில், திருநன்றியூர்,  மயிலாடுதுறை மாவட்டம் 609118.

தொலைபேசி:

கே. சுப்ரமணியகுருக்கள்   04364 320520, 94861 41430

இந்த பதிவை பகிர:
Exit mobile version