Site icon Holy Temples

அருள்மிகு மாணிக்கவண்ணர் திருக்கோயில், திருவாளப்புத்தூர்

இறைவன்: மாணிக்கவண்ணர்                    
இறைவி: பிரம குந்தளம்பாள் அம்மன்  
தீர்த்தம்: பிரம தீர்த்தம்  
பாடியோர்: திருஞானசம்பந்தர், சுந்தரர்   

கோயிலின் சிறப்புகள்:

         தேவார பாடல் பெற்ற காவிரி வடகரை ஆலயங்களில் 29 வது ஆலயம். இன்று திருவாளபுத்தூர் என வழங்குகிறது. தேவாரத்தில் வாழ்கொளிபுத்தூர் எனவும், வாள்ஒளிபுற்றூர் எனவும் வழங்கப்பெறு கின்றது. திருமால் மாணிக்க லிங்கத்தை ஸ்தாபித்து  வழிபட்டார்அருச்சுனன் பூசித்த தலம். அர்ச்சுனன் செய்த பூசைக்கு உகந்தபெருமான் அவன் வாளைப் புற்றில் ஒளித்துவைத்திருந்துமீண்டும் அவன் அத்தினாபுரி திரும்பும் போது அளித்தார் என்பது வரலாறு. இதனாலேயே வாள்ஒளிபுற்றூர் ஆயிற்று என்பது புராணம். “உன்கரவாள் நின்ற வாகையின் அயல் புற்றொளித்தான்” என்பது தலபுராணப் பாடற்பகுதி.  

        தேவர்கள்  பாற்கடலை கடைந்த  போது வாசுகி  பாம்பின்  விஷத்தை  சிவபெருமான்  உண்டு  விட்டார். வருந்திய  வாசுகி இத்தலத்தில்  மாணிக்கத்தை உமிழ்ந்து  சிவபூஜை செய்தது. இறைவன் திரு மேனி மாணிக்கமாதலின் வாள்ஒளிபுத்தூர் என்பதாகி பின்னாளில் இவ்வாறு மருவியது

         தக்ஷிணாமூர்த்திக்கு  எதிரேயும்  நந்தி உள்ளது.  மகிஷாசுரனை  வதம் செய்த துர்கை அம்மன் சிவனை  வணங்கி  எட்டு கைகளுடன்  அருள் புரிகிறார்மெய்கண்டாருக்கு  சன்னதி இருக்கிறதுநாகங்களுக்கு நடுவே  விநாயகர் உள்ளார்.

தேவாரம்:   

பொடியுடைமார்பினர் போர்விடையேறிப் பூதகணம் 
புடைசூழக்கொடியுடையூர்திரிந் தையங் கொண்டு பலபலகூறி
வடிவுடைவாணெடுங் ண்ணுமைபாகமாயவன்வாழ்கொளி
புத்தூர்க கடிகமழ் மாமலரிட்டுக் கறைமிடற்றானடி காண்போம்

இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:

மயிலாடுதுறையில் இருந்து மணல்மேடு செல்லும் சாலையில் 13.கி.மீ. தொலைவில்  இக்கோயில் உள்ளது. மயிலாடுதுறையில் இருந்து பேருந்துகள் உள்ளன. காரிலோ ஆட்டோவிலோ செல்வது சிறந்தது. 

தங்கும் வசதி:

மயிலாடுதுறையில் தங்கி அங்கிருந்து செல்லலாம். 

கோயில் திறந்திருக்கும் நேரம்:

காலை 6.00 – 12.00 மற்றும் மாலை 4.00 – 8.00

கோயிலின் முகவரி:

அருள்மிகு  மாணிக்கவண்ணர் திருக்கோயில், திருவாளப்புத்தூர், மயிலாடுதுறை மாவட்டம் 609205.

தொலைபேசி:

ஏ .நாகராஜ சிவாச்சாரியார்  9842538954 

இந்த பதிவை பகிர:
Exit mobile version