Site icon Holy Temples

அருள்மிகு செங்கண்மால் திருக்கோயில், திருநாங்கூர்

 

இறைவன்:
செங்கண்மால்
இறைவி:
செங்கமலவல்லி
தீர்த்தம்:
சூரிய புஷ்கரனி தீர்த்தம்
மங்களாசாசனம்:
திருமங்கையாழ்வார்

 

 கோயிலின் சிறப்புகள்:

      மங்கள  சாசனம் பெற்ற திருத்தலங்களில்  இது 36 வது திருத்தலம். திருத்தெற்றியம்பலம் எனப்படும் பள்ளிகொண்ட பெருமாள் சன்னதி திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற தலம். 108 வைணவ திருத் தலங்களில் இத்தலம் ஒன்றிற்கு மட்டுமே அம்பலம் என்னும் சொல் வழங்கப்படுகிறது. மணவாள மாமுனிகள் இங்கு வந்து இத்தலத்து பெருமாளை தரிசனம் செய்துள்ளார். ஒரு சமயம் ஹிரண்யாக்ஷன் என்னும் அசுரன் பூமிதேவியை பாதாளலோகத்துக்குள் மறைத்து வைத்து விடுகிறான். தேவர்கள் பூமாதேவியை மீட்டுத் தர வேண்டி பெருமாளிடம் முறையிடுகின்றனர். பெருமாள் வராஹ அவதாரம் எடுத்து சென்று ஹிரண்யாக்ஷனுடன் போர் புரிகிறார். போரில் வெற்றி பெற்று பூமாதேவியை மீட்டு கொண்டுவருகிறார். ஆக்ரோஷமாக ஹிரண்யாக்ஷகனோடு போர் புரிந்ததால் களைப்புற்று வந்தவர் அந்த களைப்பு தீர சிவந்திருந்த கண்களுடன் பள்ளிகொண்டார். சிவந்த கண்களையுடையதால் செங்கண்மால் என்ற திருநாமத்தோடு அருள்புரிகிறார்.

 

 பிரபந்தம்:  

மாற்றரசர்மணிமுடியும்திறலும்தேசும்
     மற்றவர்தம்காதலிமார்குழையும்
தந்தை கால்தளையும்உடன்கழலவந்துதோன்றிக்
     கதநாகம்காத்தளித்தகண்ணர்கண்டீர்
நூற்றிதழ்கொளரவிந்தம்நுழைந்தபள்ளத்து
     இளங்கமுகின்முதுபாளைபகுவாய்நண்டின்
சேற்றளையில்வெண்முத்தம்சிந்து நாங்கூர்த்
     திருத்தெற்றியம்பலத்துஎன்செங்கண்மாலே

 இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:

 சீர்காழியிலிருந்து திருவெண்காடு செல்லும் வழியில் 11 கி.மீ.தொலைவில் இவ்வூர் உள்ளது. ஏராளமான பேருந்து வசதிகள் உண்டு.

 

 கோயில் திறந்திருக்கும் நேரம்:

 காலை  6.00  –  10.00 மற்றும் மாலை  5.00  – 7.00

  

கோயிலின் முகவரி:

 அருள்மிகு செங்கண்மால் திருக்கோயில், திருத்தெற்றியம்பலம், திருநாங்கூர், மயிலாடுதுறை மாவட்டம் 609106.

  

தொலைபேசி:

 04364-275689 

இந்த பதிவை பகிர:
Exit mobile version