Site icon Holy Temples

அருள்மிகு உத்வாகநாதர் திருக்கோயில், திருமணஞ்சேரி

இறைவன்: உத்வாகநாதர்                           
இறைவி: கோகிலாம்பாள் 
தீர்த்தம்: சப்தசாகரம் 
பாடியோர்: சுந்தரர், சம்பந்தர்     

கோயிலின் சிறப்புகள்:

         தேவார பாடல் பெற்ற காவிரி வடகரை ஆலயங்களில் 25 வது ஆலயம். இறைவன் கல்யாண சுந்தரர் வடிவங் கொண்டு கோகிலாம்பிகையை திருமணஞ் செய்த தலமென்பது ஐதிகம். இங்கு சித்திரை மாதம் திருக்கல்யாணஉத்சவம் நடைபெறும்போது இறைவன் மாப்பிள்ளை கோலத்தில் எதிர்கொள்பாடிக்கு எழுந்து அருளுவார். அங்குள்ள சிவாச்சாரியார் அவரை மணமகளின் தந்தையாக பாவித்து இறைவனை பூரண கும்ப மரியாதையை குடுத்து சீரும் கொடுத்து பெருமை செய்வார். பின்புதான், இறைவன் இங்கு வந்து கோகிலாம்பாளை திருமணம் செய்துகொள்வார். இன்றும் இத்திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெறுகிறது. இதனால் இக்கோயிலுக்கு திருமணத்தடை உள்ளவர்கள் இந்தியா முழுவதிலிருந்து தினமும் வந்து வேண்டுகிறார்கள். இங்கு வேண்டிகொண்டால் தடைபடும் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. திருமணம் முடிந்தபின்பும் வந்து இறைவனை வணங்கி நன்றி கூறுகிறார்கள். குழந்தை இல்லாதவர்கள், ராகு தோஷம் உள்ளவர்களும் இங்கு வந்து வேண்டி செல்கிறார்கள். 

தேவாரம்:   

விதியானை விண்ணவர் தாந்தொழு தேத்திய
நெதியானை நீள்சடை மேனிகழ் வித்தவான்
மதியானை வண்பொழில் சூழ்ந்த மணஞ்சேரிப்
பதியானைப் பாடவல் லார்வினை பாறுமே

இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:

மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 10.கி.மீ.  தொலைவில் உள்ள குத்தாலத்திலிருந்து  4.கி.மீ.  தொலைவில்   இக்கோயில் உள்ளது. குத்தாலத்திலிருந்து ஆட்டோவில் செல்லலாம். 

தங்கும் வசதி:

மயிலாடுதுறையில் தங்கி அங்கிருந்து செல்லலாம். 

கோயில் திறந்திருக்கும் நேரம்:

காலை 7.00 – 1.30 மற்றும் மாலை 3.30 – 8.30

கோயிலின் முகவரி:

அருள்மிகு உத்வாகநாதர் திருக்கோயில், திருமணஞ்சேரி,  குத்தாலம் வழி,  மயிலாடுதுறை மாவட்டம் 609801.

தொலைபேசி:

ராஜு  குருக்கள்: 04364 – 230661, 235002

இந்த பதிவை பகிர:
Exit mobile version