Site icon Holy Temples

அருள்மிகு வர்த்தமானீஸ்வரர் திருக்கோயில், திருப்புகலூர் வர்த்தமானீஸ்வரம்

இறைவன்: வர்த்தமானீஸ்வரர்  
இறைவி: கருந்தார் குழலி அம்மன் 
தீர்த்தம்: அக்னி தீர்த்தம் 
பாடியோர்: சம்பந்தர்

கோயிலின் சிறப்புகள்:

         தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 76 வது ஆலயம்.  திருப்புகலூர் மூலவர் அக்னிபுரீஸ்வரர் சன்னதியை ஒட்டி, அதன் இடது புறத்தில் மற்றொரு பாடல் பெற்ற தலமான திருப்புகலூர் வர்த்தமானீஸ்வரம் கோயிலுக்குள் கோயிலாக உள்ளது. மூலவர் அக்னிபுரீஸ்வரர் சன்னதிக்குள் நுழையும் வாயில் வழியாகவே அடுத்துள்ள வர்த்தமானீஸ்வரர் சன்னதிக்குச் செல்லமுடியும். அதற்கு தனியாக வேறு வாயில் காணப்படவில்லை. அதில் வர்த்தமானீஸ்வரர் உள்ளார். அவருக்கு அருகில் பலி பீடம் உள்ளது. எதிரில் முருக நாயனார் சிற்பம் உள்ளது. அருகே சுவரில் ஞானசம்பந்தர் திருப்புகலூர் வர்த்தமானீசுரத்தைப் போற்றிப் பாடிய பதிகம் காணப்படுகிறது.

தேவாரம்:   

பட்டம் பால்நிற மதியம் படர்சடைச் சுடர்விடு பாணி
நட்டம் நள்ளிரு ளாடும் நாதன் நவின்றுறை கோயில்
புட்டன் பேடையொ டாடும் பூம்புக லூர்த்தொண்டர் போற்றி
வட்டஞ் சூழ்ந்தடி பரவும் வர்த்தமா னீச்சரத் தாரே

இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:

நன்னிலம் நாகப்பட்டினம் சாலையில் 10.கி.மீ. தொலைவில் இக்கோயில் உள்ளது. நன்னிலத்திலிருந்து பேருந்துகள் உள்ளன. 

தங்கும் வசதி:

திருவாரூரில் தங்கி அங்கிருந்து செல்லலாம். 

கோயில் திறந்திருக்கும் நேரம்:

காலை 5.30 – 12.00 மற்றும் மாலை 4.00 – 8.00

கோயிலின் முகவரி:

அருள்மிகு  அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்புகலூர்,  திருக்கண்ணபுரம் வழி, நாகப்பட்டினம் மாவட்டம் 609704.

தொலைபேசி:

9443113025, 04366 – 236119,  292300

இந்த பதிவை பகிர:
Exit mobile version