Site icon Holy Temples

அருள்மிகு நர்த்தன வல்லபேஸ்வரர் திருக்கோயில், திருக்கூடலையாற்றூர்

 

 

 

 

 

இறைவன்: நெறிகாட்டுநாயகர், நர்தனவல்லபேஸ்வரர்
இறைவி: புரிகுழலாம்பிகை, ஞான சக்தி
தீர்த்தம்: மணிமுத்தாறு
பாடியோர்: சுந்தரர்

 

  கோயிலின் சிறப்புகள்:

      தேவார பாடல் பெற்ற தொண்டை நாட்டு ஆலயங்களில் 3 வது ஆலயம். பிரம்மாவும் சரஸ்வதியும் தவம் செய்து சிவபெருமானின் . நடனகாட்சியை கண்டனர். ஆகையால் இறைவன் நர்த்தனவல்லபேஸ்வரர் என்றும்  அழைக்கபடுகிறார்.  கும்பகோணத்தை அடுத்த திருப்புறம்பயத்தில் இருந்து சுந்தரமுர்த்தி நாயனார் விருத்தாசலம் செல்லும் வழியில், இங்குதான் சிவபெருமான் ஒரு அந்தணர் வடிவில் நின்றதை பார்த்தார் . அவரை  விருத்தாசலம் செல்ல வழி வினவ அவர்  திருகூடலையாற்றூர்  வழியாகத்தான் செல்லவேண்டும் என்று வழி காட்டிக்கொண்டே வந்து கோயில்  வந்தவுடன் மறைந்து விட்டார். சுந்தரரும் இறைவனின் திருவிளையாட்டை அறிந்து இங்கே  தங்கி பதிகம் பாடி பின்பு விருத்தாசலம் சென்றார்.

       இங்கு மணிமுத்தாறு வெள்ளாறு ஆகிய நதிகள் இங்கு கூடுவதால் கூடலையாற்றூர் என்று பெயர் வந்தது.  இங்கு எமதர்மராஜாவின் உதவியாளர் சித்திரகுப்தருக்கு தனி சன்னதி உள்ளது. சுயம்பு லிங்கமாக இங்கு அருள் புரியும் சிவலிங்கத்தின் மேல் சித்திரை மாதம் முதல் மூன்று நாட்கள் சூரிய ஒளி பட்டு சூரிய பூஜை நடைபெறுகிறது. இங்கு நவகிரங்களுக்கு தனி சன்னதி இல்லை. சனீஸ்வரர் மட்டும் பொங்கு சனிஸ்வரராக அருள் புரிகிறார்.

          ஞானசக்திக்கும் பாரசக்திக்கும் தனி தனி சன்னதி உள்ளது. பிரம்மாவும் சரஸ்வதியும் தவம் செய்ததால் இங்கு குழந்தைகள்  வழிபட்டால் மறதி நீங்கி   நல்ல படியாக படிக்கலாம்.

 

 தேவாரம்:   

ஊர்தொறும் வெண்தலைகொண்டு உண்பலி இடும் என்று
வார் தரு மென் முலையாம் மங்கையொடும் உடனே
கூர் நுனை மழுவேந்திக்  கூடலையாற்றூரில்
ஆர்வன் இவ்வழி போந்த அதிசயம் அறியேனே

 இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:

 விருத்தாசலத்திலிருந்து  23  கி.மீ. தொலைவிலும்  சிதம்பரத்திலிருந்து 25  கி.மீ. தொலைவிலும் இக்கோயில் உள்ளது. இவ்விரண்டு ஊர்களிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன.

 

 கோயில் திறந்திருக்கும் நேரம்:

 காலை 6.00 – 10.00 மற்றும் மாலை 6.00 – 8.00

 

 கோயிலின் முகவரி:

 அருள்மிகு  நெறிகாட்டுநாயகர் நர்த்தனவல்லபேஸ்வரர்  திருக்கோயில்,

 திருகூடலையாற்றூர், காவலகுடி அஞ்சல், காட்டுமன்னார்கோயில் வட்டம், கடலூர் மாவட்டம், 608702.

 

 தொலைபேசி:

 பி.கிரித்திவாசக்குருக்கள்  04144 – 208704,  9942249938

இந்த பதிவை பகிர:
Exit mobile version