Site icon Holy Temples

அருள்மிகு பனங்காட்டீஸ்வரர் திருக்கோயில், பனையபுரம்

இறைவன்: பனங்காட்டீஸ்வரர்
இறைவி: சத்யாம்பிகை, புறவம்மை
தீர்த்தம்: பத்ம தீர்த்தம்
பாடியோர்: ஞானசம்பந்தர்

கோயிலின் சிறப்புகள்:

         தேவார பாடல் பெற்ற நடு நாட்டு ஆலயங்களில் 20 வது ஆலயம். சிவபெருமானை அவமதிக்க வேண்டி தக்கன் செய்த யாகத்திற்கு சென்று அவிர் பாகம் பெற்ற தேவர்களை கோபம் கொண்ட இறைவன் தேவர்களுக்கு வீரபத்திரரை கொண்டு தண்டனை தந்தார். சூரியனும் தண்டனை பெற்று ஒளியிழந்தான். தனது தவறுக்கு மன்னிப்பு வேண்டி மிண்டும் ஒளி பெற சிவபெருமானை பல தலங்களுக்கு சென்று வழிபட்டார். அப்படி வழிபட்ட தலங்களில் இதவும் ஒன்று. சித்திரை மாதம் ஏழு நாட்கள் இறைவன் மற்றும் இறைவி மீது சூரிய ஒளி படுகிறது.

          புறாவுக்கு அடைக்கலம் தந்து தன் கண்களை அளித்த சிபி சக்ரவர்த்திக்கு காட்சி தந்து மீண்டும் இறைவன் கண்ணொளி தந்த தலம். பனை மரத்தை தல விருட்சமாக கொண்ட ஐந்து தலங்களுள் இதுவும் ஒன்று.

தேவாரம்:   

மையினார் மணிபோல் மிடற்றனை மாசில் வெண்பொடிப் பூசும்
மார்பனைப் பைய தேன்பொழில் சூழ் புறவார் பனங்காட்டூர்
ஐயனைப் புகழான காழியுள் ஆய்ந்த நான்மறை ஞானசம்பந்தன்
    செய்யுள் பாடவல்லார் சிவலோகஞ் சேர்வாரே

இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:

சென்னை தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் விக்ரவாண்டியிலிருந்து 10 கி.மீ. தொலைவில் இக்கோயில் உள்ளது. பண்ருட்டியிலிருந்தும், விக்ரவாண்டியிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன.

தங்கும் வசதி:

விழுப்புரம் மற்றும் பண்ருட்டியில்  தங்கி அங்கிருந்து செல்லலாம். இவ்விரு ஊர்களிலும் தங்கும் விடுதிகள் உள்ளன. 

கோயில் திறந்திருக்கும் நேரம்:

காலை 6.00 – 11.00 மற்றும் மாலை 4.00 – 8.00

கோயிலின் முகவரி:

அருள்மிகு பனங்காட்டீஸ்வரர் திருக்கோயில், பனையபுரம் அஞ்சல், முண்டியம்பாக்கம், விழுப்புரம் மாவட்டம் 605603.

தொலைபேசி:

கணேச குருக்கள் –  94448 97861, 99420 56781

இந்த பதிவை பகிர:
Exit mobile version