Site icon Holy Temples

அருள்மிகு திருஊரகபெருமாள் கோயில், குன்றத்தூர்

கோயிலின் சிறப்புகள்:

     இந்த கோயில் சென்னை குன்றத்தூரில் முருகன் கோயிலுக்கும், கந்தழீஸ்வரர் கோயிலுக்கும் நடுவில் அமைந்துள்ளது. இக்கோயில் குலோத்துங்க சோழனால்
கட்டப்பட்டது. ஒரு சமயம் குலோத்துங்க சோழன் காஞ்சியில் உள்ள திருஊரக பெருமாளை தரிசித்து தன் தோஷம் விலகப்பெற்றான். தோஷம் போக்கிய பெருமாளுக்கு நன்றிக் கடனாக ஒரு கோயில் கட்ட எண்ணினான். அப்போது அவனது கனவில் தோன்றிய பெருமாள் திருப்பதி வெங்கடாசலபதி வடிவில் காட்சி தந்தார். அதே வடிவில் ஒரு சிலை வடித்து பிரதிஷ்டை செய்து கோயில் கட்டினான். அதுவே இந்த கோயிலாகும். இங்கு புரட்டாசி நாலாவது சனிக்கிழமையில் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி சேவை சாதிப்பது காண கண்கொள்ளா காட்சியாகும். பங்குனி மாதம் ரோகினி நட்சத்திரத்தில் சுவாமி தாயார் திருக்கல்யாணம் நடக்கின்றது.

பலன்கள்:

மன்னனுக்கு தோஷம் விளக்கிய பெருமாள் ஆதலால், இந்த பெருமாளை கிரக தோஷம் உள்ளவர்கள் அந்தந்த கிரகத்திற்கு உரிய நாட்களில் தரிசித்தால் தோஷ நிவர்த்தி பெறுவர் என்பது ஐதீகம்.

இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:

சென்னை குன்றத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து 2 km தொலைவில் உள்ளது.

 

கோயில் திறந்திருக்கும் நேரம்:

காலை 9.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை

மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை

கோயில் முகவரி:

அருள்மிகு திருஊரக பெருமாள் கோயில்

குன்றத்தூர், சென்னை – 600069

தொலைபேசி:

 044 – 24780436, 9840158781

இந்த பதிவை பகிர:
Exit mobile version