Change your cover photo
Upload
Natanam
Change your cover photo
இவர் மயிலாடுதுறையை பூர்வீகமாக கொண்டவர். இந்திய அரசின் மக்கள் கணக்கெடுப்பு துறையின் முன்னாள் அதிகாரி. மிகச்சிறந்த ஆன்மீகவாதி. எண்ணற்ற கோயில்களை தரிசனம் செய்த அனுபவம் உள்ளவர்.
This user account status is Approved

This user has not added any information to their profile yet.

     திரு. நடராஜன் அவர்கள் கோயில்களுக்கு புகழ்பெற்ற மயிலாடுதுறை மாவட்டத்தில் வரகடை என்னும் ஊரில் திரு. சடையப்ப பிள்ளை, தங்கம் அம்மாள் ஆகியோருக்கு மூத்த மகனாக 1954 ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் தனது பள்ளிப் படிப்பையும் கல்லூரி படிப்பையும் சிதம்பரத்தில் படித்தார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றார். சிறுவயது முதலே தினமும் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். அந்த நடராஜர் கோயிலே தன்னை மிகச்சிறந்த ஆன்மீகவாதியாக உருவாக்கியதாக குறிப்பிட்டுள்ளார். 

     இவர் இந்திய அரசின் மக்கள் கணக்கெடுப்பு துறையில் 41 ஆண்டு காலம் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். பணி நிமித்தமாக இந்தியா முழுவதும் ஏறத்தாழ அனைத்து மாநிலங்களுக்கும் சென்று வந்துள்ளார். ஒவ்வொரு ஊருக்கு செல்லும் போதும் அந்தந்த ஊரின் கோயில்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் போது தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டதை மிகவும் பெருமையாக கருதுகிறார். சிறந்த  பணிக்காக   இந்திய குடியரசு  தலைவரின் வெள்ளி பதக்கம்  3 முறையும் வெண்கல பதக்கம்  ஒருமுறையும் பெற்றுள்ளார். மக்கள்  கணக்கெடுப்பு  அலுவலர் சங்கத்தில்  மாநில அளவில் முதன்மை  பதவிகள் வகித்த பின்னர் அகில  இந்திய அளவிலும் தலைவர் பதவி வகித்துள்ளார். 

     இவரது சொந்த கிராமத்தில் இவரது முன்னோர்கள் உருவாக்கிய  63 நாயன்மார்  குருபூஜை மடத்தின்  நிர்வாக அறக்காவலராக பணியாற்றி குருபூஜைகளை சிறந்த  முறையில் நடத்திய அனுபவம் உள்ளவர். மேலும் அவ்வூரிலுள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தின் குடமுழுக்கையும் முன்னின்று நடத்திய அனுபவம் உள்ளவர். தருமபுரம், திருவாடுதுறை, திருப்பனந்தாள் மற்றும் குன்றக்குடி ஆகிய ஆதீனங்களிடம்  அருளாசி பெற்றவர். 

    தேவாரப் பாடல்  பெற்ற சிவத்தலங்களில்  160 தலங்களையும், வைணவ திவ்ய தேசங்களில் பூலோகத்தில்  உள்ள 106 திவ்ய தேசங்களையும் தரிசித்து பேறுபெற்றவர். இமயமலைத் தலங்களான ஹரித்வார், ரிஷிகேஷ், பத்ரிநாத் மற்றும் நேபாளத்தில் உள்ள முக்திநாத் ஆகிய தலங்களையும் தரிசித்துள்ளார். மேலும் 7 ஜோதிர்லிங்கங்கள், அஸ்ஸாமிலுள்ள காமாக்கியா ஆகிய கோயில்களை தரிசித்த அனுபவமும் 17 முறை சபரிமலை சென்ற அனுபவமும் உள்ளவர். 2021 ஆம் ஆண்டு திருக்கயிலைநாதரை தரிசிக்க கைலாஷ் யாத்திரை செல்ல திட்டமிட்டுள்ளார்.