கோயிலின் சிறப்புகள்:
இமய மலையில் இன்றும் வாழ்வதாக கருதப்படும் பாபாஜியின் அவதார தலம் இதுவாகும். பாபாஜியின் சீடரான ராமையா என்பவரால் இக்கோயில் எழுப்பப்பட்டது.
பாபாஜியின் சந்நிதியின் முன் கவுரிசங்கர்பீடம் என்னும் யாக குண்டம் உள்ளது. பாபாஜி அவதார நாளான கார்த்திகை மாத ரோகினி நட்சத்திரத்தன்று இதில் யாக பூஜை நடக்கும். பாபாஜி கதிர்காமம் சென்றபோது, அவருக்கு முருகன் காட்சி தந்தார். இதை உணர்த்தும்விதமாக, ஒரு ஆலமரத்தின் கீழ் பாபவிற்கு முருகன் காட்சி தரும் சிலை வடிக்கப்பட்டுள்ளது. பாபாஜி சன்னதி விமானத்தில் அவரது வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகள் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. பாபாஜியை சிலை வடிவமாக தரிசிக்கக் கூடிய கோயில் இது ஒன்றேயாகும்.
பலன்கள்:
தியானம் மற்றும் யோக நிலையை அடைய விரும்புபவர்கள் இங்கு வழிபாடு செய்கிறார்கள்.
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
பரங்கிபேட்டை பேருந்து நிலையத்திலிருந்து 1 KM தொலைவில் இக்கோயில் உள்ளது. சிதம்பரத்திலிருந்து 23 KM தொலைவு. பரங்கிப்பேட்டையிலிருந்து ஆட்டோ வசதி உள்ளது.
தங்கும் வசதி:
அருகிலுள்ள சிதம்பரத்தில் தங்கி அங்கிருந்து செல்லலாம். சிதம்பரத்தில் ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 6.00 மணி முதல் மதியம் 9.30 மணி வரை
மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை
கோயில் முகவரி:
அருள்மிகு பாபாஜி திருக்கோயில், ரேவு மெயின்ரோடு, பரங்கிப்பேட்டை, கடலூர் மாவட்டம் – 608502.