இறைவன்: | சுவேதாரண்யேஸ்வரர், நீலகண்டேஸ்வரர், திருகுமாரசாமி |
இறைவி: | வீராமுலையம்மன் |
தீர்த்தம்: | நீலோத்பவம் |
பாடியோர்: | சுந்தரர், அப்பர், சம்பந்தர் |
கோயிலின் சிறப்புகள்:
தேவார பாடல் பெற்ற நடு நாட்டு ஆலயங்களில் 4 வது ஆலயம். வேதாகமங்களின் உட்பொருளை சிவன் பார்வதிக்கு உபதேசிக்கும்போது பார்வதியின் கவனமின்மையால் சிவபெருமான் பார்வதியை பூமியில் பிறக்க சாபம் கொடுத்தார். முருகன் தன் தாயார் சாபம் பெற காரணமான வேத காமங்களை கடலில் எறிந்து விட்டார். சிவபெருமான் முருகன் பூமியில் ஊமையாக பிறக்க சாபம் கொடுத்தார். முருகனும் மதுரையில் வணிகர் குலத்தில் பிறந்தார். அவருக்கு உருத்திரசன்மர் என்று பெயர் இட்டு வளர்த்தனர். வயது அடைந்த உடன் பல சிவதலங்களுக்கு சென்று வணங்கி இறுதியாக எருக்கத்தம்புலியூர் வந்து சிவலிங்கத்தை வணங்கி பேசும் திறன் பெற்றார். குமரன் வழிபட்டதால் திருகுமராசுவாமி ஆனார். உருத்திரசன்மரான முருகனின் சன்னதி உள்ளது. இந்த கோயில் இறைவனை ராஜராஜசோழன் குழந்தை வரம் வேண்டி வழி பட்டதால் ராஜேந்திரசோழன் பிறந்தார். ஆகையால் ராஜேந்திரபட்டிணம் என்ற பெயர் வந்தது.
இங்கு வழிபடவந்த முனிவர்களும் தேவர்களும் மரங்களாகவும் பறவைகளாவும் மாறி வழிபட்டனர். வேடர்கள் மரங்களை வெட்டியும் பறவைகளை வேட்டையாடியும் வந்தனர். அவர்களை எதற்கும் பயன்படாத வெள்ளெருக்கு செடிகளாக மாற்றி வழிபட செய்தலால் எருக்கத்தம்புலியூர் என்ற பெயர் வந்தது.
இறைவன் சுயம்பு முர்த்தி. மார்ச் 16 முதல் 20 வரை சூரிய ஒளி சிவலிங்கத்தின் மேல் விழுந்து பூஜை செய்கிறது. திருநீலகண்ட நாயனார் அவதரித்த தலம். பேச்சில் குறைபாடு உள்ளவர்கள் வழிபட்டால் குணம் உண்டு.
தேவாரம்:
மறையான் நெடுமால்காண் பரியான் மழுவேந்தி
நிறைய மதிசூடி நிகழ் முத்தின் ஒத்தே
இறையா எருக்கத்தம்புலியூரிடங் கொண்ட
கறையார் மிடற்றானைக் கருதகேடும் வினையே
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
விருத்தாச்சலத்திலிருந்து ஜெயம்கொண்டம் செல்லும் வழியில் 13 கி.மீ. தொலைவில் இக்கோயில் உள்ளது.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 6.00 – 12.00 மற்றும் மாலை 5.00 – 8.00
கோயிலின் முகவரி:
அருள்மிகு சுவேதாராண்யேஸ்வரர் திருக்கோயில், இராஜேந்திரபட்டிணம், விருத்தாசலம் வட்டம், கடலூர் மாவட்டம் 608703.
தொலைபேசி:
சிவசக்திகனேசகுருக்கள் .04143 – 243533, 9976173524