அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருக்குவளை

இறைவன்: பிரம்மபுரீஸ்வரர்     
இறைவி:

வண்டமர்பூங்குழலி 

தீர்த்தம்: சந்திர நதி, பிரம்ம தீர்த்தம் 
பாடியோர்: அப்பர், சம்பந்தர், சுந்தரர் 

கோயிலின் சிறப்புகள்:

         தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 123 வது ஆலயம்.  ஆதியில் பிரமன் சிருஷ்டி தொழிலைப் பெறவேண்டிப் பூசித்தான். அதனால் பிரமதபோவனம் என வழங்கப்பெறும். தனது சாபம் நீங்க பிரம்மா தீர்த்தம் அமைத்து நீராடி மணலால் லிங்கம் அமைத்து வழிபட்டு சாபம் நீங்கிய தலம் . இதனால் இறைவன் பெயர் பிரம்மபுரீஸ்வரர். மணலால் ஆன லிங்கம் ஆனதால் அமாவாசை அன்றுமட்டும்சாம்பிராணி தைலம் சாத்தி அபிஷேகம், மற்ற நாட்களில் குவளை சாத்திதான் அபிஷேகம்.

          நவகோள்களும் தோஷம் நீங்கி பூசித்துப் பேறு பெற்றமையால் கோளிலி என வழங்கப்பெறுகிறது. இது சப்தவிடங்கத் தலங்களுள் ஒன்று. இங்கே எழுந்தருளியுள்ள தியாகர் ஊழிப்பரன், அவனிவிடங்கத்தியாகர். நடனம் வண்டு நடனம் . விநாயகர் தியாக விநாயகர். முருகன் சுந்தரவடிவேலன். சுந்தரமூர்த்திகளுக்குக் குண்டையூர்கிழார் தந்த நெல்மலையைப் பூதங்களைக் கொண்டு திருவாரூரில் சேர்ப்பித்த அற்புதத்தலம். தீர்த்தம் முத்திநதியாகிய சந்திரநதி, மணிகர்ணிகை, இந்திர தீர்த்தம், அகத்தியதீர்த்தம், விநாயகதீர்த்தம், சக்தி தீர்த்தம் என்பன. விருட்சம் தேற்றாமரம். பிரமதேவர், திருமால், இந்திரன், அகத்தியன்,முசுகுந்தன், பஞ்சபாண்டவர்கள், நவகோள்கள், ஒமகாந்தன் முதலியோர் வழிபட்ட தலம் . இது தருமை ஆதீன திருக்கோயில்.

தேவாரம்:   

நீள நினைந்தடியேன் உனை
நித்தலுங் கைதொழுவேன்
வாளன கண்மடவா ளவள்
வாடி வருந்தாமே
கோளிலி எம்பெருமான் குண்டை
யூர்ச்சில நெல்லுப் பெற்றேன்
ஆளிலை எம்பெருமான் அவை
அட்டித் தரப்பணியே

இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:

திருவாரூரிலிருந்து  24.கி.மீ.  தொலைவில் இக்கோயில்  உள்ளது. திருவாரூரிலிருந்து  பேருந்துகள்  உள்ளன. 

தங்கும் வசதி:

திருவாரூரில் தங்கி அங்கிருந்து செல்லலாம். 

கோயில் திறந்திருக்கும் நேரம்:

காலை 6.00 – 12.00 மற்றும் மாலை 4.00 – 8.00

கோயிலின் முகவரி:

அருள்மிகு  பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருக்குவளை, நாகப்பட்டினம்  மாவட்டம் 610204.

தொலைபேசி:

04366 – 245412,  9486446358

இந்த பதிவை பகிர:

விரைவு இணைப்புகள்(Quick Links)

தொடர்புடைய பதிவுகள்

அருள்மிகு  வாய்மூர்நாதர் திருக்கோயில், திருவாய்மூர்

அருள்மிகு வாய்மூர்நாதர் திருக்கோயில், திருவாய்மூர்

இறைவன்: வாய்மூர்நாதர்     இறைவி: பாலின் நன்மொழியாள்  தீர்த்தம்: சூரிய தீர்த்தம்   பாடியோர்: அப்பர், சம்பந்தர் கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 124 வது ஆலயம்.  விடங்கர் எழுந்தருளியிருக்கும் தலங்கள் 7ல் ஒன்று. இவர் நீலவிடங்கர்,...

அருள்மிகு மனத்துணைநாதர் திருக்கோயில், வலிவலம்

அருள்மிகு மனத்துணைநாதர் திருக்கோயில், வலிவலம்

இறைவன்: மனத்துணைநாதர்     இறைவி: மாழையொண்கண்ணி தீர்த்தம்: காரணர்கங்கை  பாடியோர்: அப்பர், சம்பந்தர், சுந்தரர்  கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 121 வது ஆலயம். இது வலியன் பூசித்த தலமாதலின் இப்பெயர்பெற்றது. வலியன் என்பது...

அருள்மிகு தேவபுரீஸ்வரர் திருக்கோயில், தேவூர்

அருள்மிகு தேவபுரீஸ்வரர் திருக்கோயில், தேவூர்

இறைவன்: தேவபுரீஸ்வரர்     இறைவி: தேன்மொழியம்மை   தீர்த்தம்: தேவ தீர்த்தம்  பாடியோர்: சம்பந்தர் கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 85 வது ஆலயம்.  மாடக்கோயில் அமைப்புடையது. .இத்தலத்தில் குபேரன் வழிபட்டு சங்கநிதி, பதுமநிதிகளைப்...