அருள்மிகு வாய்மூர்நாதர் திருக்கோயில், திருவாய்மூர்

இறைவன்: வாய்மூர்நாதர்    
இறைவி:

பாலின் நன்மொழியாள் 

தீர்த்தம்: சூரிய தீர்த்தம்  
பாடியோர்: அப்பர், சம்பந்தர்

கோயிலின் சிறப்புகள்:

         தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 124 வது ஆலயம்.  விடங்கர் எழுந்தருளியிருக்கும் தலங்கள் 7ல் ஒன்று. இவர் நீலவிடங்கர், நடனம் கமலநடனம். கருவறையின் தென்புறம் தியாகராஜர் சன்னதி உள்ளது. வடபுறம் திருமறைக்காடு இறைவன் வேதாரண்யேஸ்வரர் சன்னதியும் அம்பாள் சன்னதியும் காணப்படுகின்றன. சூரியன் பூசித்துப் பேறு பெற்ற தலம். சைவப் பெருமக்களாகிய அப்பரும், சம்பந்தரும் திருமறைக் காட்டில் எழுந்தருளியிருந்த  பொழுது வாய்மூர் இறைவர் அப்பர் கனவில் தோன்றி “நாம் வாய்மூரில் இருப்போம் வா”  என்றனர். உடனே அப்பர் விரைவில் எழுந்து இறைவரைத் தொடர்ந்து சென்றார். திருக்கோயிலுக்கு அருகில் சென்றதும் இறைவர் மறைந்துவிட்டனர். இதற்குள் ஞானசம்பந்தரும் அங்கு எழுந்தருள, அப்பர், “கதவைத் திறக்கப்பாடிய நானும் , செந்தமிழ் உறைக்கப் பாடி அதை அடைத்த ஞானசம்பந்தப் பெருந்தகையாரும் எழுந்தருளி யுள்ளார். அவர்க்குக் காட்சியை அளிக்கவாவது வெளிப்பட்டருள வெண்டும்”  என்றுபாட அவ்வாறே வாய்மூர் இறைவர் காட்சி தந்தருளினார். முசுகுந்த சக்கரவர்த்தி கட்டிய திருக்கோயில். 

தேவாரம்:   

பாட அடியார் பரவக் கண்டேன்
பத்தர் கணங்கண்டேன் மொய்த்த பூதம்
ஆடல் முழவம் அதிரக் கண்டேன்
அங்கை அனல்கண்டேன் கங்கை யாளைக்
கோட லரவார் சடையிற் கண்டேன்
கொக்கி னிதழ்கண்டேன் கொன்றை கண்டேன்
வாடல் தலையொன்று கையிற் கண்டேன்
வாய்மூ ரடிகளைநான் கண்ட வாறே

இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:

திருவாரூரிலிருந்து திருக்குவளை வழியாக வேதாரண்யம் செல்லும் பாதையில் திருக்குவளையில் இருந்து 5.கி.மீ.  தொலைவில் இக்கோயில்  உள்ளது. திருவாரூரிலிருந்து  பேருந்துகள்  உள்ளன. 

தங்கும் வசதி:

திருவாரூரில் தங்கி அங்கிருந்து செல்லலாம். 

கோயில் திறந்திருக்கும் நேரம்:

காலை 6.00 – 11.00 மற்றும் மாலை 4.00 – 8.00

கோயிலின் முகவரி:

அருள்மிகு  வாய்மூர்நாதர் திருக்கோயில், திருவாய்மூர், திருக்குவளை வட்டம், நாகப்பட்டினம்  மாவட்டம் 610204.

தொலைபேசி:

 9786244876

இந்த பதிவை பகிர:

விரைவு இணைப்புகள்(Quick Links)

தொடர்புடைய பதிவுகள்

அருள்மிகு மனத்துணைநாதர் திருக்கோயில், வலிவலம்

அருள்மிகு மனத்துணைநாதர் திருக்கோயில், வலிவலம்

இறைவன்: மனத்துணைநாதர்     இறைவி: மாழையொண்கண்ணி தீர்த்தம்: காரணர்கங்கை  பாடியோர்: அப்பர், சம்பந்தர், சுந்தரர்  கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 121 வது ஆலயம். இது வலியன் பூசித்த தலமாதலின் இப்பெயர்பெற்றது. வலியன் என்பது...

அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருக்குவளை

அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருக்குவளை

இறைவன்: பிரம்மபுரீஸ்வரர்      இறைவி: வண்டமர்பூங்குழலி  தீர்த்தம்: சந்திர நதி, பிரம்ம தீர்த்தம்  பாடியோர்: அப்பர், சம்பந்தர், சுந்தரர்  கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 123 வது ஆலயம்.  ஆதியில் பிரமன் சிருஷ்டி தொழிலைப்...

அருள்மிகு தேவபுரீஸ்வரர் திருக்கோயில், தேவூர்

அருள்மிகு தேவபுரீஸ்வரர் திருக்கோயில், தேவூர்

இறைவன்: தேவபுரீஸ்வரர்     இறைவி: தேன்மொழியம்மை   தீர்த்தம்: தேவ தீர்த்தம்  பாடியோர்: சம்பந்தர் கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 85 வது ஆலயம்.  மாடக்கோயில் அமைப்புடையது. .இத்தலத்தில் குபேரன் வழிபட்டு சங்கநிதி, பதுமநிதிகளைப்...