அருள்மிகு மனத்துணைநாதர் திருக்கோயில், வலிவலம்

இறைவன்: மனத்துணைநாதர்    
இறைவி:

மாழையொண்கண்ணி

தீர்த்தம்: காரணர்கங்கை 
பாடியோர்: அப்பர், சம்பந்தர், சுந்தரர் 

கோயிலின் சிறப்புகள்:

         தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 121 வது ஆலயம். இது வலியன் பூசித்த தலமாதலின் இப்பெயர்பெற்றது. வலியன் என்பது கரிக்குருவி. கரிக்குருவி சிறிய உருவம் கொண்டது. முன்ஜன்ம வினை பயனால் அடுத்த ஜன்மத்தில் கரிக்குருவியாக பிறந்தது . முனிவர் ஒருவரின் அறிவுரை படி மதுரை மீனாக்ஷி அம்மன் சமேத சொக்கநாதரை தரிசித்து பின்னர் இந்த கோயில் இறைவனை தரிசித்தது . கரிக்குருவியின் வேண்டுகோளுக்கு இணங்க இறைவன் கரிக்குருவிக்கும் அதன்சந்ததிக்கும் வலிமை அளித்ததால் குருவிக்கு வலியன் என்று பெயர்வந்தது சூரியனும், காரணரிஷியும் பூசித்துப் பேறுபெற்றனர். சுவாமி சந்நிதி கட்டுமலைமேல் இருக்கின்றது. கோயிலைச்சுற்றிக் கிழக்குப்பக்கம் தவிர அகழி சூழ்ந்திருக்கிறது. மாடக்கோயிலுள் ஒன்று.

          இத்தல விநாயகர் வலம்புரி விநாயகர். அவரை பற்றி திருஞானசம்பந்தர் பாடிய தேவாரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பாடலை முதலில் பாடிய பிறகுதான் ஓதுவார்கள் மற்ற பாடல்களை பாடுவார்கள்.  

தேவாரம்:   

பிடியத னுருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடு மவரிடர்
கடிகண பதிவர வருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே

இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:

திருக்குவளையில் இருந்து 3.கி.மீ.  தொலைவில் இக்கோயில்  உள்ளது. திருவாரூரிலிருந்து  பேருந்துகள்  உள்ளன. 

தங்கும் வசதி:

திருவாரூரில் தங்கி அங்கிருந்து செல்லலாம். 

கோயில் திறந்திருக்கும் நேரம்:

காலை 6.00 – 12.00 மற்றும் மாலை 4.00 – 8.30

கோயிலின் முகவரி:

அருள்மிகு  மனத்துணைநாதர் திருக்கோயில், வலிவலம், திருக்குவளை வட்டம், நாகப்பட்டினம்  மாவட்டம் 610207.

தொலைபேசி:

04366 – 205636

இந்த பதிவை பகிர:

விரைவு இணைப்புகள்(Quick Links)

தொடர்புடைய பதிவுகள்

அருள்மிகு  வாய்மூர்நாதர் திருக்கோயில், திருவாய்மூர்

அருள்மிகு வாய்மூர்நாதர் திருக்கோயில், திருவாய்மூர்

இறைவன்: வாய்மூர்நாதர்     இறைவி: பாலின் நன்மொழியாள்  தீர்த்தம்: சூரிய தீர்த்தம்   பாடியோர்: அப்பர், சம்பந்தர் கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 124 வது ஆலயம்.  விடங்கர் எழுந்தருளியிருக்கும் தலங்கள் 7ல் ஒன்று. இவர் நீலவிடங்கர்,...

அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருக்குவளை

அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருக்குவளை

இறைவன்: பிரம்மபுரீஸ்வரர்      இறைவி: வண்டமர்பூங்குழலி  தீர்த்தம்: சந்திர நதி, பிரம்ம தீர்த்தம்  பாடியோர்: அப்பர், சம்பந்தர், சுந்தரர்  கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 123 வது ஆலயம்.  ஆதியில் பிரமன் சிருஷ்டி தொழிலைப்...

அருள்மிகு தேவபுரீஸ்வரர் திருக்கோயில், தேவூர்

அருள்மிகு தேவபுரீஸ்வரர் திருக்கோயில், தேவூர்

இறைவன்: தேவபுரீஸ்வரர்     இறைவி: தேன்மொழியம்மை   தீர்த்தம்: தேவ தீர்த்தம்  பாடியோர்: சம்பந்தர் கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 85 வது ஆலயம்.  மாடக்கோயில் அமைப்புடையது. .இத்தலத்தில் குபேரன் வழிபட்டு சங்கநிதி, பதுமநிதிகளைப்...