அருள்மிகு தேவபுரீஸ்வரர் திருக்கோயில், தேவூர்

இறைவன்: தேவபுரீஸ்வரர்    
இறைவி:

தேன்மொழியம்மை  

தீர்த்தம்: தேவ தீர்த்தம் 
பாடியோர்: சம்பந்தர்

கோயிலின் சிறப்புகள்:

         தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 85 வது ஆலயம்.  மாடக்கோயில் அமைப்புடையது. .இத்தலத்தில் குபேரன் வழிபட்டு சங்கநிதி, பதுமநிதிகளைப் பெற்ற தலம். விராடன் தன் மகள் உத்தரையுடன் வந்து வழிபட்ட தலம். தேவர்கள்,  இந்திரன், வியாழபகவான், சூரியன் முதலானோரும் வழிபட்ட திருத்தலம்.  வேண்டுதலுக்கு செவிசாய்த்து வியாழபகவானுக்கு குரு பட்டம் வழங்கியதால் இங்குள்ள தக்ஷிணாமூர்த்தி பகவான் தேவகுரு என அழைக்கப்படுகிறார்.  இங்குள்ள துர்க்கை ஒரு கையில் சங்கும் இன்னொரு கையில் மானும் மழுவும் ஏந்தி சிவ விஷ்ணு துர்கையாக காட்சிதருகிறார். 

தேவாரம்:   

பண்ணி லாவிய மொழியுமை பங்கனெம் பெருமான்
விண்ணில் வானவர் கோன்விம லன்விடை யூர்தி
தெண்ணி லாமதி தவழ்தரு மாளிகைத் தேவூர்
அண்ணல் சேவடி யடைந்தன மல்லலொன் றிலமே

இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:

திருவாரூர் நாகப்பட்டினம் சாலையில் திருவாரூரிலிருந்து  15.கி.மீ.  தொலைவில் உள்ள கீழ்வேளூரிலிருந்து 5.கி.மீ. தொலைவில் இக்கோயில்  உள்ளது.  திருவாரூரிலிருந்து  பேருந்துகள்  உள்ளன. 

தங்கும் வசதி:

திருவாரூரில் தங்கி அங்கிருந்து செல்லலாம். 

கோயில் திறந்திருக்கும் நேரம்:

காலை 6.00 – 12.00 மற்றும் மாலை 4.00 – 8.00

கோயிலின் முகவரி:

அருள்மிகு  தேவபுரீஸ்வரர்  திருக்கோயில், தேவூர், கீழ்வேளூர் வட்டம், நாகப்பட்டினம்  மாவட்டம் 611109.

தொலைபேசி:

9486278810, 8838717520

இந்த பதிவை பகிர:

விரைவு இணைப்புகள்(Quick Links)

தொடர்புடைய பதிவுகள்

அருள்மிகு  வாய்மூர்நாதர் திருக்கோயில், திருவாய்மூர்

அருள்மிகு வாய்மூர்நாதர் திருக்கோயில், திருவாய்மூர்

இறைவன்: வாய்மூர்நாதர்     இறைவி: பாலின் நன்மொழியாள்  தீர்த்தம்: சூரிய தீர்த்தம்   பாடியோர்: அப்பர், சம்பந்தர் கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 124 வது ஆலயம்.  விடங்கர் எழுந்தருளியிருக்கும் தலங்கள் 7ல் ஒன்று. இவர் நீலவிடங்கர்,...

அருள்மிகு மனத்துணைநாதர் திருக்கோயில், வலிவலம்

அருள்மிகு மனத்துணைநாதர் திருக்கோயில், வலிவலம்

இறைவன்: மனத்துணைநாதர்     இறைவி: மாழையொண்கண்ணி தீர்த்தம்: காரணர்கங்கை  பாடியோர்: அப்பர், சம்பந்தர், சுந்தரர்  கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 121 வது ஆலயம். இது வலியன் பூசித்த தலமாதலின் இப்பெயர்பெற்றது. வலியன் என்பது...

அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருக்குவளை

அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருக்குவளை

இறைவன்: பிரம்மபுரீஸ்வரர்      இறைவி: வண்டமர்பூங்குழலி  தீர்த்தம்: சந்திர நதி, பிரம்ம தீர்த்தம்  பாடியோர்: அப்பர், சம்பந்தர், சுந்தரர்  கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 123 வது ஆலயம்.  ஆதியில் பிரமன் சிருஷ்டி தொழிலைப்...