அருள்மிகு கேடிலியப்பர் திருக்கோயில், கீழ்வேளூர்

இறைவன்: கேடிலியப்பர், அட்சயலிங்கேஸ்வரர்   
இறைவி:

வனமுலையம்மமன், சுந்தரகுஜாம்பிகை 

தீர்த்தம்: சரவண தீர்த்தம் 
பாடியோர்: அப்பர், சம்பந்தர்

கோயிலின் சிறப்புகள்:

         தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 84 வது ஆலயம். தீர்த்தம் சரவணப்பொய்கை. முருகவேள் பூசித்துப் பேறுபெற்ற பதி. அவருடைய பூசைக்கும் தவத்துக்கும் கெடுதியுண்டாகாதவாறு இறைவியார் துர்க்கையின் அம்சமாகக் காவல் பூண்டிருந்தார். நான்கு திசைகள் ஆகாயம் ஆகிய ஐந்து திசைகளில் இருந்து பிரச்சனை ஏற்பட்டாலும் காக்கும் தெய்வம் . ஆதலால் இவருக்கு அஞ்சு வட்டத்து அம்மை என்றுபெயர். அவருடைய திருக்கோயில் முதல் பிராகாரத்தில் வட பக்கத்தில் இருக்கின்றது. இச்செய்தி, “மண்டுபே ரொளியான கேடிலியை யர்ச்சித்த வள்ளிநாயகன் வருகவே மாகாளிகாத்த கீழ்வேளூரில் மாதவம் வளர்த்த வேலவன் வருகவே“ என்னும் இத்தலத்தைப்பற்றிய ஷேத்த்திரக்கோவைப் பிள்ளைத் தமிழால் அறியலாம். அகத்தியர்,கூத்தப்பெருமானது வலத்திரு வடியைக்கண்டு தரிசித்த பதியும் இதுவேயாகும். குபேரனுக்குத் தனியாகக் கோயில் உள்ளமையால் அவனும் பூசித்துப் பேறுபெற்றிருக்கவேண்டும். இத்திருக்கோயிலைப் பெருந்திருக்கோயில் என்று இவ்வூர்ப் பதிகத்தில் ஞானசம்பந்தப் பெருந்தகையார் கூறியுள்ளார். எனவே, கோயில் இறைவனார் இறைவியார் திருப்பெயர்கள் இவைகள் எல்லாம் தேவாரத்தில் போற்றப்பட்ட சிறப்புடையனவாகும். 

தேவாரம்:   

மின்னு லாவிய சடையினர் விடையினர் மிளிர்தரு மரவோடும்
பன்னு லாவிய மறையொலி நாவினர் கறையணி கண்டத்தர்
பொன்னு லாவிய கொன்றையந் தாரினர் புகழ்மிகு கீழ்வேளூர்
உன்னு லாவிய சிந்தையர் மேல்வினை யோடிட வீடாமே

இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:

திருவாரூர் நாகப்பட்டினம் சாலையில் திருவாரூரிலிருந்து  15.கி.மீ.  தொலைவில்  இக்கோயில்  உள்ளது.  திருவாரூரிலிருந்து  பேருந்துகள்  உள்ளன. 

தங்கும் வசதி:

திருவாரூரில் தங்கி அங்கிருந்து செல்லலாம். 

கோயில் திறந்திருக்கும் நேரம்:

காலை 5.00 – 12.00 மற்றும் மாலை 4.00 – 9.00

கோயிலின் முகவரி:

அருள்மிகு  கேடிலியப்பர் திருக்கோயில், கீழ்வேளூர், நாகப்பட்டினம்  மாவட்டம் 611104.

தொலைபேசி:

04366- 276733, 9994440478

இந்த பதிவை பகிர:

விரைவு இணைப்புகள்(Quick Links)

தொடர்புடைய பதிவுகள்

அருள்மிகு  வாய்மூர்நாதர் திருக்கோயில், திருவாய்மூர்

அருள்மிகு வாய்மூர்நாதர் திருக்கோயில், திருவாய்மூர்

இறைவன்: வாய்மூர்நாதர்     இறைவி: பாலின் நன்மொழியாள்  தீர்த்தம்: சூரிய தீர்த்தம்   பாடியோர்: அப்பர், சம்பந்தர் கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 124 வது ஆலயம்.  விடங்கர் எழுந்தருளியிருக்கும் தலங்கள் 7ல் ஒன்று. இவர் நீலவிடங்கர்,...

அருள்மிகு மனத்துணைநாதர் திருக்கோயில், வலிவலம்

அருள்மிகு மனத்துணைநாதர் திருக்கோயில், வலிவலம்

இறைவன்: மனத்துணைநாதர்     இறைவி: மாழையொண்கண்ணி தீர்த்தம்: காரணர்கங்கை  பாடியோர்: அப்பர், சம்பந்தர், சுந்தரர்  கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 121 வது ஆலயம். இது வலியன் பூசித்த தலமாதலின் இப்பெயர்பெற்றது. வலியன் என்பது...

அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருக்குவளை

அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருக்குவளை

இறைவன்: பிரம்மபுரீஸ்வரர்      இறைவி: வண்டமர்பூங்குழலி  தீர்த்தம்: சந்திர நதி, பிரம்ம தீர்த்தம்  பாடியோர்: அப்பர், சம்பந்தர், சுந்தரர்  கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 123 வது ஆலயம்.  ஆதியில் பிரமன் சிருஷ்டி தொழிலைப்...