அருள்மிகு வைகுண்டநாதர் திருக்கோயில், திருநாங்கூர்

 

இறைவன்:
வைகுண்டநாதர்
இறைவி:
வைகுண்டவல்லி தாயார்
தீர்த்தம்:
லக்ஷ்மி புஷ்கரணி தீர்த்தம்
மங்களாசாசனம்:
திருமங்கையாழ்வார்

 

 கோயிலின் சிறப்புகள்:

      மங்களாசாசனம் பெற்ற திருத்தலங்களில் இது 33வது திருத்தலம். இக்கோயில் வைகுண்டமான பரமபதத்தில் சங்கு சக்கரங்களுடன் எழுந்தருளியுள்ள வைகுண்டநாதனே இந்த வைகுந்த விண்ணகரத்தில் உள்ளான் என்பதும் சிவனின் ருத்ர தாண்டவத்தை நிறுத்த பரமபத நாதன் புறப்பட்டு வர அவரைப் பின்பற்றி 10 பெருமாள்களும் இவ்விடம் (திருநாங்கூர்) வந்தனர் என்பதும் தொன்நம்பிக்கை. பரமபதத்தில் இருந்து வந்ததால் அதே தோற்றத்தில் இங்கும் காணப்படுகிறார். மனித  உடலில் வைகுண்டத்தை தரிசிக்க முடியாது. இங்கே வைகுண்டநாதனை தரிசிக்கலாம்.

 

 பிரபந்தம்: 

சலங்கொண்டஇரணியனது அகல்மார்வம் கீண்டு
     தடங்கடலைக்கடைந்த அமுதம்கொண்டுகந்தகாளை
நலங்கொண்டகருமுகில்போல் திருமேனி அம்மான்
     நாள்தோறும்மகிழ்ந்து இனிதுமருவியுறை கோயில்
சலங்கொண்டுமலர்சொரியும் மல்லிகைஒண்செருந்தி
     சண்பகங்கள்மணநாறும் வண்பொழிலினூடே
வலங்கொண்டு கயலோடிவிளையாடு நாங்கூர்
     வைகுந்தவிண்ணகரம் வணங்குமடநெஞ்சே 

இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:

 சீர்காழியிலிருந்து திருவெண்காடு செல்லும் வழியில் 11 கி.மீ.தொலைவில் இவ்வூர் உள்ளது. ஏராளமான பேருந்து வசதிகள் உண்டு.

 

கோயில் திறந்திருக்கும் நேரம்:

 காலை 7.00  –  10.00 மற்றும் மாலை 4.00  – 7.00

 

கோயில் முகவரி:

 அருள்மிகு வைகுண்டநாதர் திருக்கோயில், திருவைகுந்தவிண்ணகரம், திருநாங்கூர், மயிலாடுதுறை மாவட்டம் 609106.

 

தொலைபேசி:

 04364-275478  

இந்த பதிவை பகிர:

விரைவு இணைப்புகள்(Quick Links)

தொடர்புடைய பதிவுகள்

அருள்மிகு வைகல்நாதேஸ்வரர் திருக்கோயில், திருவைகல்

அருள்மிகு வைகல்நாதேஸ்வரர் திருக்கோயில், திருவைகல்

இறைவன்: வைகல்நாதேஸ்வரர் இறைவி: கொம்பியல் கோதை அம்மன்  தீர்த்தம்: செண்பக தீர்த்தம்  பாடியோர்: சம்பந்தர்       கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 33 வது ஆலயம். வைகல் என்னும் ஊரில் மாடக்கோயில் அமைப்பில் அமைந்த காரணத்தால் இப்பெயர்...

அருள்மிகு உமாமகேஸ்வரர் திருக்கோயில், கோனேரிராஜபுரம்

அருள்மிகு உமாமகேஸ்வரர் திருக்கோயில், கோனேரிராஜபுரம்

இறைவன்: உமாமகேஸ்வரர்                               இறைவி: அங்கவளநாயகி தீர்த்தம்: பிரம்ம தீர்த்தம்  பாடியோர்: சம்பந்தர்       கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 34 வது ஆலயம். முகப்பு மண்டபத்தின் விதானத்தில் அழகிய வண்ண ஓவியங்கள்...

அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில், தேரழுந்தூர்

அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில், தேரழுந்தூர்

இறைவன்: வேதபுரீஸ்வரர்                              இறைவி: சௌந்தராம்பிகை  தீர்த்தம்: வேத தீர்த்தம்  பாடியோர்: சம்பந்தர்       கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 38 வது ஆலயம். அகத்தியர் இறைவனை வழிபடும்போது அதை அறியாத மன்னன்...