இறைவன்: |
பேரருளாளன் |
இறைவி: |
அல்லிமாமலர் தாயார் |
தீர்த்தம்: |
நித்திய புஷ்கரணி தீர்த்தம் |
மங்களாசாசனம்: |
திருமங்கையாழ்வார் |
கோயிலின் சிறப்புகள்:
மங்களா சாசனம் பெற்ற திருத்தலங்களில் இது 31வது திருத்தலம். இராவணனை அழித்தபின் இராமபிரான் இந்த தலத்தில் இருந்த த்ருடநேத்திரர் என்ற முனிவரின் குடிலில் தங்கி அவர் கூறியவாறு தங்கத்தினால் ஒரு பசு செய்து அங்கு நான்கு நாட்கள் தங்கி பின்னர் அப்பசுவை ஒரு அந்தணர்க்குத் தானம் செய்தார். அந்த அந்தணர் அந்தப் பொன்னைக் கொண்டு இந்தக் கோயிலை கட்டியபடியால் இதற்கு செம்பொன் செய்கோவில் என்று பெயர் வந்ததாக இக்கோயிலின் தலவரலாறு கூறுகிறது. இழந்த செல்வங்களை மீட்டு தரும் தலம்.
பிரபந்தம்:
பேரணிந்துஉலகத்தவர்தொழுதேத்தும் பேரருளாளன்எம்பிரானை வாரணிமுலையாள்மலர்மகளோடு மண்மகளும்உடன்நிற்ப சீரணிமாடநாங்கைநன்னடுவுள் செம்பொன்செய்கோயிலினுள்ளே காரணிமேகம்நின்றதொப்பானைக் கண்டுகொண்டுஉய்ந்தொழிந்தேனே
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
சீர்காழியிலிருந்து திருவெண்காடு செல்லும் வழியில் 11 கி.மீ.தொலைவில் இவ்வூர் உள்ளது. ஏராளமான பேருந்து வசதிகள் உண்டு.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 7.00 – 10.00 மற்றும் மாலை 6.00 – 8.00
கோயில் முகவரி:
அருள்மிகு பேரருளாளன் திருக்கோயில், திருச்செம்பொன்செய் கோயில், திருநாங்கூர், மயிலாடுதுறை மாவட்டம், 609106.
தொலைபேசி:
04364-236172