அருள்மிகு குடமாடும் கூத்தன் திருக்கோயில், திருநாங்கூர்

 

இறைவன்:
குடமாடும் கூத்தன்
இறைவி:
அமிர்தகடவல்லி
தீர்த்தம்:
கோடி மற்றும் அமிர்த தீர்த்தம்
தலவிருட்சம்:
பலா
மங்களாசாசனம்:
திருமங்கையாழ்வார்

 

 கோயிலின் சிறப்புகள்:

      மங்களா சாசனம்  பெற்ற திருத்தலங்களில் இது 29வது திருத்தலம். குடத்துடன்  ஆடி  கொண்டு வந்தவர்  என்பதாலும். கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்து ஆடிய இறைவன் என்பதாலும்  குடமாடு கூத்தன் என்ற பெயர். உதங்க முனிவர் இறைவனைக் குறித்து தவம் புரிந்து, கோபால கண்ணனாக இத்தலத்தில் பெருமாளைத் தரிசித்ததாக ஒரு வரலாறும் உண்டு. மூலஸ்தானத்தில்  இறைவன் தரையில் வெண்ணை  பானையின்  மேல் ஒரு காலை வைத்து கொண்டு  அமர்ந்த கோலத்தில்  காட்சி  தருகிறார்.

 

பிரபந்தம்: 

திருமடந்தைமண்மடந்தை இருபாலும்திகழத்
     தீவினைகள்போயகலஅடியவர்கட்குஎன்றும்
அருள்நடந்து இவ்வேழுலகத்தவர்ப்பணிய வானோர்
     அமர்ந்தேத்தஇருந்தஇடம் பெரும்புகழ்வேதியர் வாழ்
தரும்இடங்கள்மலர்கள்மிகுகைதைகள்செங்கழுநீர்
     தாமரைகள்தடங்கள்தொறும் இடங்கள்தொறும் திகழ
அருவிடங்கள்பொழில்தழுவி எழில்திகழும்நாங்கூர்
     அரிமேயவிண்ணகரம்வணங்குமடநெஞ்சே! 

இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:

 சீர்காழியிலிருந்து திருவெண்காடு செல்லும் வழியில் 11 கி.மீ.தொலைவில் இவ்வூர் உள்ளது. ஏராளமான பேருந்து வசதிகள் உண்டு.

 

கோயில் திறந்திருக்கும் நேரம்:

 காலை 9.00  –  12.00 மற்றும் மாலை 4.00  –  6.00

 

கோயில் முகவரி:

 அருள்மிகு குடமாடும் கூத்தன் திருக்கோயில், அரிமேய விண்ணகரம், திருநாங்கூர், மயிலாடுதுறை மாவட்டம் 609106.

 

தொலைபேசி:

 04364-275689,   9443985843

இந்த பதிவை பகிர:

விரைவு இணைப்புகள்(Quick Links)

தொடர்புடைய பதிவுகள்

அருள்மிகு வைகல்நாதேஸ்வரர் திருக்கோயில், திருவைகல்

அருள்மிகு வைகல்நாதேஸ்வரர் திருக்கோயில், திருவைகல்

இறைவன்: வைகல்நாதேஸ்வரர் இறைவி: கொம்பியல் கோதை அம்மன்  தீர்த்தம்: செண்பக தீர்த்தம்  பாடியோர்: சம்பந்தர்       கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 33 வது ஆலயம். வைகல் என்னும் ஊரில் மாடக்கோயில் அமைப்பில் அமைந்த காரணத்தால் இப்பெயர்...

அருள்மிகு உமாமகேஸ்வரர் திருக்கோயில், கோனேரிராஜபுரம்

அருள்மிகு உமாமகேஸ்வரர் திருக்கோயில், கோனேரிராஜபுரம்

இறைவன்: உமாமகேஸ்வரர்                               இறைவி: அங்கவளநாயகி தீர்த்தம்: பிரம்ம தீர்த்தம்  பாடியோர்: சம்பந்தர்       கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 34 வது ஆலயம். முகப்பு மண்டபத்தின் விதானத்தில் அழகிய வண்ண ஓவியங்கள்...

அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில், தேரழுந்தூர்

அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில், தேரழுந்தூர்

இறைவன்: வேதபுரீஸ்வரர்                              இறைவி: சௌந்தராம்பிகை  தீர்த்தம்: வேத தீர்த்தம்  பாடியோர்: சம்பந்தர்       கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 38 வது ஆலயம். அகத்தியர் இறைவனை வழிபடும்போது அதை அறியாத மன்னன்...