இறைவன்: | வைகல்நாதேஸ்வரர் |
இறைவி: | கொம்பியல் கோதை அம்மன் |
தீர்த்தம்: | செண்பக தீர்த்தம் |
பாடியோர்: | சம்பந்தர் |
கோயிலின் சிறப்புகள்:
தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 33 வது ஆலயம். வைகல் என்னும் ஊரில் மாடக்கோயில் அமைப்பில் அமைந்த காரணத்தால் இப்பெயர் பெற்றுள்ளது. இக்கோயில் ஊரின் மேல் பக்கத்தில் இருக்கிறது. இது கோச்செங்கட்சோழனால் கட்டப்பெற்ற பழமையும் பெருமையும் வாய்ந்தது. திருமால் பூமிதேவியை மட்டும் திருமணம் செய்ததலால் மஹாலக்ஷ்மி கோபமடைந்து செண்பக காடுகள் நிறைந்த இந்த தலத்தில் தவம் செய்தார். பெருமாளும் பூமிதேவியும் லக்ஷ்மிதேவியை தேடி இறைவனை வழிபட்டனர். சிவபெருமான் திருவருளால் பெருமாள் இருவரையும் திருமணம் செய்துகொண்டார். பிரம்மனும் வழிபட்ட தலம். இதே ஊரில், திருமால் வழிபட்ட விசுவநாதர் கோயில் மற்றும் பிரமன் வழிபட்ட பிரமபுரீசுவரர் கோயில் ஆகிய திருக்கோயில்களும் அமைந்துள்ளன.
தேவாரம்:
மெய்யக மிளிரும்வெண் ணூலர் வேதியர்
மையகண் மலைமக ளோடும் வைகிடம்
வையக மகிழ்தர வைகல் மேற்றிசைச்
செய்யகண் வளவன்முன் செய்த கோயிலே
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
கும்பகோணம் மயிலாடுதுறை சாலையில் உள்ள ஆடுதுறையில் இருந்து 7.கி.மீ. தொலைவில் இக்கோயில் உள்ளது. ஆடுதுறையிலிருந்து ஆட்டோவில் செல்லலாம்.
தங்கும் வசதி:
கும்பகோணத்தில் தங்கி அங்கிருந்து செல்லலாம்.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 6.00 – 12.00 மற்றும் மாலை 5.00 – 8.00
கோயிலின் முகவரி:
அருள்மிகு வைகல்நாதேஸ்வரர் திருக்கோயில், திருவைகல் , மயிலாடுதுறை மாவட்டம் 612201.
தொலைபேசி:
0435 – 2465616