இறைவன்: |
கோபாலகிருஷ்ணர் |
இறைவி: |
மடவரல்மங்கை, செங்கமல நாச்சியார் |
தீர்த்தம்: |
தடமலர் பொய்கை தீர்த்தம் |
மங்களாசாசனம்: |
திருமங்கையாழ்வார் |
கோயிலின் சிறப்புகள்:
மங்களசாசனம் பெற்ற திருத்தலங்களில் இது 27வது திவ்யதேசம். கண்ணன் சத்தியபாமாவுடன் சேர்ந்து நரகாசுரனையழித்தான். இந்திரன்,வருணன் ஆகியோரிடமிருந்து நரகாசுரன் அபகரித்த பொருட்களை அவர்கட்கே மீட்டுக் கொடுத்தான். வெகுநாளைக்குப் பின்பு, இந்திரனின் தோட்டத்தில் உள்ள பாரிஜாத மலரை சத்தியபாமா கேட்க கண்ணன் இந்திரனிடம் அம்மலரைக் கேட்டான். இந்திரன் கொடுக்க மறுக்க, சினங் கொண்ட கண்ணன் அவனோடு போரிட்டு அவனது காவளத்தை (பூம்பொழிலை) அழித்தான். 11 எம்பெருமான்களில் ஒருவனாக துவாரகாவிலிருந்து வந்த கண்ணபிரான் தான் இருக்க காவளம் போன்ற ஒரு பொழிலைத் தேடி, இந்தக் காவளம்பாடியில் கோயில் கொண்டான் என தல வரலாறு கூறுகிறது. இறைவிக்குத் தனிக் கோயில் இல்லை. திருமங்கையாழ்வாரால் மட்டும் 10 பாக்களில் பாடல் பெற்றது. திருமங்கையாழ்வாரின் பிறந்த இடமான குறையலூர் மற்றும் அவர் வைணவ அடியார்க்கு அன்னதானம் நடத்திய மங்கை மடம் இந்த தலத்திற்கு மிகவும் அருகாமையிலேயே அமைந்துள்ளது.
பிரபந்தம்:
மண்ணிடந்து ஏனமாகி மாவலிவலி தொலைப்பான் விண்ணவர்வேண்டச்சென்று வேள்வியில் குறையிரந்தாய் துண்ணெனமாற்றார்தம்மைத் தொலைத்தவர் நாங்கைமேய கண்ணனே! காவளந்தண்பாடியாய்! களைகண்நீயே
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
சீர்காழியில் இருந்து திருவெண்காடு செல்லு வழியில் 11 கி.மீ. தொலைவில் இக்கோயில் உள்ளது. ஏராளமான பேருந்து வசதிகள் உண்டு.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 7.00 – 11.00 மற்றும் மாலை 5.00 – 8.00
கோயில் முகவரி:
அருள்மிகு கோபாலகிருஷ்ணன் திருக்கோயில், திருக்காவளம்பாடி, திருநாங்கூர், மயிலாடுதுறை மாவட்டம் 609106.
தொலைபேசி:
04364-275478