இறைவன்: |
வரதராஜ பெருமாள் |
இறைவி: |
திருமாமகள் நாச்சியார் |
தீர்த்தம்: |
சந்திர புஷ்கரனி தீர்த்தம் |
மங்களாசாசனம்: |
திருமங்கையாழ்வார் |
கோயிலின் சிறப்புகள்:
மங்கள சாசனம் பெற்ற திருத்தலங்களில் இது 37 வது திருத்தலம். ஸ்ரீதேவி மற்றும் பூமிதேவியுடன் பெருமாள் தாமரை பீடத்தின் மேல் காட்சி தருகிறார். தக்கனின் 27 மகள்களையும் சந்திரன் திருமணம் செய்யும் போது அனைவரையும் அன்பாக நடத்துவதாக வாக்கு அளித்தார். ஆனால் ரோஹிணியுடம் மட்டும் மிகவும் அன்புடன் நடந்து கொள்கிறார். இதை பொருக்கமாட்டாமல் மற்ற 26 பேரும் தக்கனிடம் முறையிட்டனர். தக்கன் கோபத்துடன் சந்திரனின் ஒளியும் அழகும் தினமும் குறைய சாபம் அளித்தார். சாபத்தால் சந்திரன் தேய தொடங்க சாபம் தீர ஸ்ரீரங்கம், திருஇந்தளூர், தலைச்சங்காடு ஆகிய தலங்களில் தரிசனம் செய்து திருமணிகூடம் வந்து வரதராஜ பெருமாளை சரண் அடைந்தார். பெருமாளும் தரிசனம் தந்து சாபம் நீக்கி நோய் விலக செய்தார். தீராத நோய்கள் தீர இந்த பெருமாளை வழி படவேண்டும்.
பிரபந்தம்:
தூம்புடைப்பனைக்கைவேழம் துயர்கெடுத்தருளி மன்னு காம்புடைக்குன்றமேந்திக் கடுமழைகாத்தஎந்தை பூம்புனற்பொன்னி முற்றும்புகுந்து பொன்வரண்ட எங்கும் தேம்பொழில்கமழும்நாங்கூர்த் திருமணிக்கூடத்தானே
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
சீர்காழியிலிருந்து திருவெண்காடு செல்லும் வழியில் 11 கி.மீ.தொலைவில் இவ்வூர் உள்ளது. ஏராளமான பேருந்து வசதிகள் உண்டு.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 6.00 – 10.00 மாலை 5.00 – 7.00
கோயிலின் முகவரி:
அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோயில், திருமணிக்கூடம், திருநாங்கூர், மயிலாடுதுறை மாவட்டம் 609106.
தொலைபேசி:
9655465756