அருள்மிகு வெள்ளை விநாயகர் கோயில், தஞ்சாவூர்

எழுதியவர்: தி.ஜெ.ரா

கோயிலின் சிறப்புகள்:

         இக்கோயில் வெள்ளை விநாயகர் கோயில் என்று அறியபட்டாலும் இங்குள்ள விநாயகர் வல்லபை விநாயகராவார். இந்தக் கோயிலில் விநாயகருக்குள் வல்லபா தேவி ஐக்கியமாகி அரூபமாகக் காட்சி தருவதாக ஐதீகம். அதேநேரம் உற்சவர் மனைவி சகிதமாகக் காட்சி தருகிறார். வல்லபை என்பவள் சாபத்தால் அரக்கியாக மாறி முனிவர்களையும் தேவர்களையும் அச்சுறுத்தி வந்தாள். அனைவரும் சேர்ந்து சிவனிடம் முறையிட்டனர். அவர் முருகனை அனுப்பி வைத்தார். அரக்கியைக் கண்டு பயப்படுவதுபோல் நடித்த முருகன் அண்ணனை அனுப்பி வைத்தார். தனக்கு எதிரே தைரியமாக நின்ற விநாயகரைக் கண்டு சிலிர்த்தாள் வல்லபை. அவளை அப்படியே துதிக்கையால் தூக்கி தனது மடியில் அமர்த்திக் கொண்டார் கணபதி. மனித உடலும் மிருக முகமும் கொண்டவரால் சாபத்தில் இருந்து விமோசனம் கிடைக்கும் என்று அறிந்திருந்த வல்லபை அந்த நிமிடமே பழைய உருவத்தைப் பெற்றாள். விநாயகரையே திருமணம் செய்து கொண்டாள். இத்திருமணம் நடந்த இடம் இதுவேயாகும். வியாழக் கிழமைகளில் இக்கோயிலிலுள்ள பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடை பெறுகின்றன. விநாயக சதுர்த்தியன்று இந்த விநாயகருக்கு சந்தனக் காப்பு கிடையாது. அன்று காலை முதல் மாலை வரை தொடர்ந்து அபிஷேகங்கள் நடைபெறும். மூன்றாம் நாள் சந்தனகாப்பு அலங்காரத்துடன் காட்சி தருவது சிறப்பாகும். 

பலன்கள்:

திருமணமாகாத பெண்கள் இங்கு நடைபெறும் திருக்கல்யாண உற்சவத்தில் கலந்து கொண்டு, விநாயகரைத் தரிசித்து மாங்கல்யச்சரடு பெற்றுக்கொண்டால் விரைவில் திருமண வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:

தஞ்சாவூர் கீழவாசலில் இக்கோயில் அமைந்துள்ளது. பழைய பேருந்து நிலையத்திலிருந்து நடந்தோ அல்லது ஆட்டோவிலோ செல்லலாம்.

தங்கும் வசதி:

தஞ்சையில் ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன. 

கோயில் திறந்திருக்கும் நேரம்:

காலை 6.00 – 10.00 மற்றும் மாலை 5.00 – 8.00

கோயிலின் முகவரி:

அருள்மிகு வெள்ளை விநாயகர் கோயில், கீழவாசல், தஞ்சாவூர் – 613001.

தொலைபேசி:

 

இந்த பதிவை பகிர:

விரைவு இணைப்புகள்(Quick Links)

தொடர்புடைய பதிவுகள்

அருள்மிகு ஐராவதேஸ்வரர் கோயில், தாராசுரம்

அருள்மிகு ஐராவதேஸ்வரர் கோயில், தாராசுரம்

கோயிலின் சிறப்புகள்:       இத்தலத்தில் இறைவன் ஐராவதேஸ்வரர் என்ற திருநாமத்துடன் வீற்றிருந்து அருள்புரிகிறார். தஞ்சை பெரிய கோயில் போலவே சிற்பங்களை கொண்ட இக்கோயிலும் சோழர்களால் கட்டபெற்ற கொயிலேயாகும். ஒரு சமயம் இந்திரனது பட்டத்து யானையாகிய ஐராவதம், தலைக்கனம் ஏறி துர்வாச...

அருள்மிகு இராமலிங்க சுவாமி கோயில், பாபநாசம்

அருள்மிகு இராமலிங்க சுவாமி கோயில், பாபநாசம்

கோயிலின் சிறப்புகள்:      இத்தலத்தில் இறைவன் ராமலிங்கர் என்ற திருநாமத்துடன் வீற்றிருந்து அருள்புரிகிறார். இத்தலத்து அம்மனின் பெயர் பர்வதவர்தினி ஆகும். இலங்கையில் சீதையை மீட்ட ராமபிரான் ராமேஸ்வரத்தில் தனக்கு ஏற்பட்ட தோஷம் நீங்க சிவபூஜை செய்து அயோத்தி திரும்பும் வழியில்...

அருள்மிகு ஏகௌரியம்மன் திருக்கோயில், வல்லம்

அருள்மிகு ஏகௌரியம்மன் திருக்கோயில், வல்லம்

கோயிலின் சிறப்புகள்:      இக்கோயிலில் அம்மன் ஏகௌரியம்மன் என்ற பெயருடன் வீற்றிருந்து அருள்புரிகிறாள். பெண்ணால் மட்டுமே தனக்கு அழிவு உண்டாகும்படியான வரம் பெற்ற தஞ்சகாசுரன் தேவர்களை துன்புறுத்தினான். இதனால் கலங்கிய தேவர்கள் சிவனிடம் தங்களைக் காக்கும்படி முறையிட்டனர்....