அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில், திருப்போரூர்

எழுதியவர்: தி.ஜெ.ரா

கோயிலின் சிறப்புகள்:

     இத்தலத்தில் முருகப் பெருமான் கந்தசுவாமி என்ற பெயருடன் சுயம்பு மூர்த்தியாய் வீற்றிருந்து அருள்புரிகிறார். முருகப்பெருமான் அசுரர்களை அழிக்க அவர்களுடன் மூன்று இடங்களில் போரிட்டார். திருச்செந்தூரில் கடலில் போரிட்டு மாயையை அடக்கினார். திருப்பரங்குன்றத்தில் நிலத்தில் போர் செய்து கன்மத்தை அழித்தார். இங்கு விண்ணில் போர் புரிந்து ஆணவத்தை அடக்கி ஞானம் தந்தார். தாரகனுடன் போர் நடந்ததால் இத்தலத்திற்கு போரூர், தாருகாபுரி, சமராபுரி என்ற பெயர்கள் ஏற்பட்டன. கந்தசஷ்டி கவசத்தில் இத்தலத்து முருகனை சமராபுரிவாழ் சண்முகத்தரசே எனக் குறிப்பிட்டுள்ளார் பாலதேவராய சுவாமி. சுயம்புமூர்த்தியாக இருப்பதால் பிரதான பூஜைகள் செய்வதற்காக சுப்பிரமணியர் யந்திரம் பிரதிஷ்டை செய்துள்ளனர். எனவே இவருக்கு அபிஷேகம் கிடையாது. கூர்ம  பீடத்தின் மேலுள்ள இந்த யந்திரத்தில் முருகனின் 300 திருப்பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. முருகனுக்கு பூஜை நடந்தபின் இந்த யந்திரத்திற்கு பூஜை நடக்கும். பிரம்மாவிற்குரிய அட்சர மாலை, கண்டிகை, சிவனைப்போல வலது கையால் ஆசிர்வதிக்கும் அபயஹஸ்த நிலை, பெருமாளைப்போல இடது கையை தொடையில் வைத்து ஊருஹஸ்த நிலை என மும்மூர்த்திகளின் அம்சமாக முருகன் இக்கோயிலில் விளங்குகிறார். பொதுவாக அம்மன் கோயில்களில்தான் நவராத்திரி விழா கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் இக்கோயிலில் அம்மனின் மருமகள்கலான வள்ளி, தெய்வானைக்கு நவராத்திரி விழா எடுத்து கொண்டாடப்படுவது சிறப்பாகும். கொடிமரம் கோபுரத்திற்கு வெளியே இருப்பதும் சிறப்பாகும். 

பலன்கள்:

செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இந்த யந்திர முருகனை வழிபட்டு தோஷ நிவர்த்தி பெறலாம் அன்பது நம்பிக்கை. 

இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:

சென்னையிலிருந்து மகாபலிபுரம் செல்லும் பழைய சாலையில் இக்கோயில் அமைந்துள்ளது. தாம்பரத்திலிருந்து கேளம்பாக்கம் வழியாக 30 KM தொலைவில் உள்ளது. சென்னையின் அநேக இடங்களிலிருந்தும் மாநகரப் பேருந்துகள் உள்ளன.

கோயில் திறந்திருக்கும் நேரம்:

காலை 6.00 மணி முதல் மதியம் 12.30 மணி வரை

மாலை 3.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை 

கோயில் முகவரி: 

அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில் திருப்போரூர், காஞ்சிபுரம் மாவட்டம் – 603 110.

தொலைபேசி: 

044–2744 6226, 90031 27288

இந்த பதிவை பகிர:

விரைவு இணைப்புகள்(Quick Links)

தொடர்புடைய பதிவுகள்

அருள்மிகு பாலமுருகன் கோயில், ரத்தினகிரி

அருள்மிகு பாலமுருகன் கோயில், ரத்தினகிரி

கோயிலின் சிறப்புகள்:       இத்தலத்தில் உள்ள முருகன் குழந்தை வடிவில் பாலமுருகனாய் காட்சி தருகிறார். குன்றிருக்கும் இடமெல்லாம் முருகன் இருப்பான் என்ற முதுமொழிக்கு ஏற்ப இக்கோயில் ஒரு சிறிய குன்றின்மேல் அமைந்துள்ளது. இத்தலத்து முருகனுக்கு பூஜையின் போது மலர்கள்,...

அருள்மிகு நடராஜர் திருக்கோயில், சிதம்பரம்

அருள்மிகு நடராஜர் திருக்கோயில், சிதம்பரம்

  இறைவன்: நடராஜர், திருமூலநாதர் இறைவி: சிவகாமி அம்மை தீர்த்தம்: சிவகங்கை தல விருட்சம்: ஆலமரம் பாடியோர்: நால்வராலும் பாடல் பெற்ற தளம்    கோயிலின் சிறப்புகள்:         சிவாலயங்களில் முதன்மையானது.  பஞ்சபூத தலங்களில் ஆகாய தலம். இந்த தலம் உலகின் பூமத்திய ரேகையின்...

அருள்மிகு பிரகதீஸ்வரர் கோயில், கங்கைகொண்டசோழபுரம்

அருள்மிகு பிரகதீஸ்வரர் கோயில், கங்கைகொண்டசோழபுரம்

கோயிலின் சிறப்புகள்:       இக்கோயில் ராஜ ராஜ சோழனின் மகனான ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது. தந்தை தஞ்சையில் கட்டிய பெரிய கோயிலைப்போலவே தோற்றமளித்தாலும், மகன் கட்டிய கோயில் தனிச்சிறப்பை கொண்டுள்ளது. தமிழகத்திலேயே மிகப்பெரிய லிங்கத்தையும், மிகப்பெரிய நந்தியையும் உடைய...