இறைவன்: |
நடராஜர், திருமூலநாதர் |
இறைவி: |
சிவகாமி அம்மை |
தீர்த்தம்: |
சிவகங்கை |
தல விருட்சம்: |
ஆலமரம் |
பாடியோர்: |
நால்வராலும் பாடல் பெற்ற தளம் |
கோயிலின் சிறப்புகள்:
சிவாலயங்களில் முதன்மையானது. பஞ்சபூத தலங்களில் ஆகாய தலம். இந்த தலம் உலகின் பூமத்திய ரேகையின் மைய பகுதியில் அமைந்துள்ளது. சமயக்குரவர் நால்வராலும் பாடல் பெற்றது.
தங்க வேலைபாடு அமைந்துள்ள சிதம்பரம் தவிர அனைத்து கோயில்களிலும் தங்க தகடுதான் வேயப்பட்டீருக்கும். இங்குதான் நடராஜபெருமான் ஆனந்த தாண்டவம் ஆடும் மூலஸ்தானமான கனகசபையில், சோழ அரசர்களால், தங்க ஓடுகளால் வேய பெற்ற பொற்சபை உள்ளது. இந்த பொன்னம்பலத்தில் உள்ள ஒன்பது தங்க கலசங்கள் ஒன்பது சக்திகளை குறிக்கிறது. இதில் உள்ள அறுபத்திநான்கு மரத்துண்டுகள் அறுபத்திநான்கு ஆயக்கலைகளை குறிக்கும். இதில் உள்ள 21600 தங்க ஓடுகள் நாம் தினமும் உள் இழுக்கும் மூச்சு காற்றின் அளவை குறிக்கும்.. இதில் அடிக்க பட்ட 72000 ஆணிகள் நம் உடலில் உள்ள நரம்புகளை குறிக்கும்.
இங்கு திருமூலநாதரே மூலவர். சுயம்பு லிங்கம். ஆனால் நடராஜ மூர்த்தியே பிரதானமானவர். நடராஜ மூர்த்தியே ஆண்டுக்கு இரண்டு முறை (ஆனி திருமஞ்சனம் மற்றும் மார்கழி திருவாதிரை ) பக்தர்களுக்கு அருள் பாலிக்க வீதி உலா வருவார். பிரதானமானவரே வெளியே இருக்கும் பொழுது மூலஸ்தானம் வெறுமையாக இருக்ககூடாது என்பதால் இறைவன் அரூபமாக தங்க வில்வ மாலை வடிவில் நடராஜபெருமானுக்கு வலது பக்கத்தில் விற்றிருப்பார். எப்போதும் திறை போட பட்டு இருக்கும். இதைத்தான் சிதம்பர ரகசியம் என்று கூறுவர். பக்தர்கள் தரிசிப்பதற்கு, தின பூஜை செய்யும் தீட்சிதரால் மட்டும் திரை விலக்கி தரிசனம் காட்டப்படும்.
சமய குறவர் நால்வரால் எழுதபெற்ற தேவார ஏடுகள் இத்தலத்தில் இருந்தது. தேவாரம் எழதிய நால்வரும் உயிருடன் வந்தால் தான் தேவார ஏடுகளை தரமுடியும் என தீட்சிதர்கள் கூறினர். ராஜராஜ சோழ மன்னன் நம்பியாண்டார் நம்பியுடன், தன்னுடைய கூறிய புத்தியால், நால்வரையும் பஞ்சலோக திருமேனியாக இறைவன் முன்பு எழுந்தருள செய்து, சிலையாக உள்ள நடராஜபெருமானுக்கு உயிர் உள்ளது என்றால் இந்த சிலைகளுக்கும் உயிர் உண்டு என்று கூற வேறு வார்த்தை பேசாமல் தீட்சிதர்கள் தேவார ஏடுகளை மன்னனிடம் ஒப்படைத்தனர். ராஜா ராஜ சோழ மன்னனின் இந்த அறிவால் தேவார பாடல்கள் நமக்கு கிடைத்தன.
தினமும் ஆறுகால பூஜை நடைபெறுகிறது. ஆறுமுறையும் ஸ்படிக லிங்கத்திற்கு அபிஷேகம் நடைபெறும். தினமும் காலை 10 மணியளவில் கோமேதகத்திலான ரெத்தினசபாபதி எனப்படும் சிறிய நடராஜர் சிலைக்கு அபிஷேகம் நடைபெறும். அபிஷேகம் முடிந்த பிறகு முன்புறமும் பின்புறமும் தீபாராதனை செய்வார்கள். காண கண் கோடி வேண்டும். இத்தலத்தில் மட்டும் தான் பிரம்மா, விஷ்ணு மட்டும் சிவன் ஆகிய 3 கடவுள்களையும் ஓரே இடத்தில நின்று தரிசிக்க மடியும். பிரம்மா இந்த தலத்தில்தான் கோவிந்தராஜபெருமாள் மார்பில் நின்ற கோலத்தில் உள்ளார்.
தெற்கு கோபுர வாசல் தாண்டியவுடன் பிள்ளையாரும் தக்ஷிணாமூர்த்தியும் ஒரே சன்னதியில் தரிசிக்கமுடியும். அருகில் பெரிய முக்குரிணி அரிசி பிள்ளையாரை தரிசிக்கலாம். வடக்கு கோபுர வாசல் தாண்டியவுடன் சிவகாமி அம்மைக்கு தனி கோயில் உள்ளது .இங்குள்ள 64 நடன கர்ண சிற்பம் எங்கும் காணமுடியாத அற்புதமான ஒன்று. அனைத்து கோபுர வாசலிலும் அழகான அற்புதமான் சிற்பங்கள் உள்ளது.
இந்த திருகோயிலில்தான் சிவனுக்கும் காளிக்கும் நடன போட்டி நடந்து நடராஜர் வெற்றி பெற்றார். தோல்வியடைந்த காளியின் விருப்பபடி ஊர் எல்லையில் உள்ள காளி கோயிலையும் தரிசித்தால்தான் முழு பயன் கிடக்கும். திருமூலநாதர், உமாயாள்பார்வதி, நால்வர், ஐயப்பன், முருகன், சித்தி புத்தி விநாயகர், நவக்ரகம் ஆகியவர்களுக்கும் சன்னதிகள் உண்டு. இத்திருக்கோயிலை தர்சித்தாலே முக்தி கிட்டும்.
திருநீலகண்ட நாயனார், மறை ஞானசம்பந்தர், உமாபதி சிவம், நந்தனார் போன்ற அடியார்கள் முக்தி அடைந்த தலம். ஏனைய சிவ ஆலயங்களில் உள்ள சிவகலைகள் அனைத்தும் நடு இரவில் சிதம்பரம் வந்து சேரும். இந்த திருகோயில் தீட்சிதர்களால் நிர்வாகிக்கபடுகிறது. தினமும் ஆறு கால பூஜை நடைபெறுகிறது. இத்திருக்கோயில் குடமுழுக்கு 01.05.2015 அன்று நடைபெற்றது. நடராஜ பெருமான் சன்னதி அருகிலேயே வைஷ்ணவ திவ்ய தேசமான தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோயில் உள்ளது மிகவும் சிறப்பான ஒன்று.
தேவாரம்:
பத்தனாய் பாடமாட்டேன் பரமனே பரமயோகீ எத்தினாற் பத்தி செய்கேன் என்னை நீ இகழ வேண்டாம் முத்தனே முதல்வா தில்லை அம்பலத்தாடுகின்ற அத்தாவுன் அடல் காண்பான் அடியனேன் வந்தவாறே.
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
சென்னையிலிருந்து 240 KM தொலைவில் சிதம்பரம் உள்ளது. பேருந்து மற்றும் ரயிலில் செல்லலாம். சிதம்பரத்தில் ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன.
தொலைபேசி:
N.T. கணபதி தீட்சிதர், 17 கீழ சன்னதி, சிதம்பரம். 608001.
04144-225215, 94426 15215