இறைவன்: |
பாசுபதேஸ்வரர் |
இறைவி: |
நல்லநாயகி |
தீர்த்தம்: |
சிவகங்கை |
பாடியவர்கள்: |
அப்பர், திருஞானசம்பந்தர் |
கோயிலின் சிறப்புகள்:
காவேரி வடகரை ஆலயங்களில் 2 வது ஆலயம். சிதம்பரம் அருகே 3 கீ.மீ.கிழக்கே உள்ள அண்ணாமலை பல்கலைகழகம் அருகே அமைந்துள்ளது. இறைவன் சுயம்பு மூர்த்தி. அர்ஜுனனுக்கு பாசுபதம் கிடைக்க பெற்ற தலம். பாசுபதம் கையிலேந்திய உற்சவரை காணலாம். அம்பிகையின் சன்னதியில் அர்ஜூனன் ஒருகாலில் நின்று தவம் புரிதல், ஆயுதங்களை சமர்பித்தல், இறைவன் வேடன் வடிவம் எடுத்தல், அர்ஜூனன் சிவனுடன் போர் புரிவது போன்ற அற்புதமான சிற்பங்கள் உள்ளது.
திருஞானசம்பந்தர் சிதம்பரத்தில் தங்க பயந்து இத்தலத்தில் தங்கிதான் சிதம்பரம் நடராஜரை தரிசித்து வந்தார். இந்த தலமும் சிவபுரி தலமும் சாஸ்திரப்படி அமையபெற்ற திருத்தலங்கள். பேசுவதில் குறைபாடு உள்ளவர்கள் இங்கு உள்ள இறைவனை வணங்கி மண் உருண்டை பிரசாதம் சாப்பிட்டால் குணம் கிடைக்கும்.
தேவாரம் :
அந்தமும் ஆதியும் ஆகிய அண்ணல் ஆரழல் அங்கை அமர்ந்திலங்க
மந்த முழவம் இயம்ப மலைமகள் காண நின்றாடிச்
சந்த மிலங்கு நகுதலை கங்கை தண்மதியம் மயலே ததும்ப
வெந்த வெண்ணீறு மெய்பூசும் வேட்கள நன்னகராரே
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் அருகில் இக்கோயில் உள்ளது. இந்த ஆலயத்துடன் திருநெல்வாயில், திருக்கழிபாலை ஆலயங்களை சேர்த்து தரிசிக்கலாம்.
கோயில் முகவரி:
அருள்மிகு பாசுபதேஸ்வரர் திருகோயில், திருவேட்களம், அண்ணாமலைநகர், சிதம்பரம் வட்டம், கடலூர் மாவட்டம். 608002.
தொலைப்பேசி:
திரு. கந்தசாமி குருக்கள், 04144-238274, 98420 08291