அருள்மிகு உச்சிநாதர் திருக்கோயில், சிவபுரி

 

இறைவன்:
உச்சிநாதர்
இறைவி:
கனகாம்பிகை
தீர்த்தம்:
கிருபாசமுத்திரம்
பாடியவர்:
சம்பந்தர்

 

 கோயிலின் சிறப்புகள்:

      நெல்வயல்களிடயே அமைந்த திருக்கோயில் ஆகையால் திருநெல்வாயில் என்று அழைக்கபட்டது. தற்சமயம் சிவபுரி என  அழைக்கபடுகிறது.

       சிவலிங்கம் சுயும்பு மூர்த்தி. சிவலிங்கத்திற்கு பின்புறம் சிவன் பார்வதி திருவுருவங்கள் திருமண கோலத்தில்  உள்ளன.  குருவாயூர் போன்று இங்கும் குழந்தைகளுக்கு முதல் சோறு ஊட்டுகிறர்கள்.

       சம்பந்தர் திருமணத்திற்கு தன்னுடைய 63 பேர் குழுவுடன் சிதம்பரத்திலிருந்து ஆச்சாள்புரம் செல்லும் வழியில் உச்சிக்காலமாகி விட்டதால் சிவபுரியில் தங்கினர்.  இவர்களின் பசியறிந்த இறைவன் பணியாளராக வந்து அறுசுவை விருந்து அளித்தார்.  ஆகையால் இத்தல இறைவன் உச்சிநாதர் என்று அழைக்கபடுகிறார்.

 

 தேவாரம்: 

மறையினர் மழுவாளினார் மல்கு 
     பிறையினார் பிறையோடிலங்கிய
நிறையினார் நெல்வயிலார் தொழும் 
     இறைவானரெம் துச்சியரே.

 இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:

 சிதம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து 4  K.M தொலைவில் உள்ளது. ஆட்டோ, காரில் செல்லலாம்.

 

 கோயில் முகவரி:

 அருள்மிகு உச்சிநாதர் திருக்கோயில், சிவபுரி அஞ்சல், அண்ணாமலைநகர் வழி, சிதம்பரம் வட்டம், கடலூர் மாவட்டம். 608002.

 

 தொலைபேசி:

 முத்துக்குமார குருக்கள் – 98426 24580

இந்த பதிவை பகிர:

விரைவு இணைப்புகள்(Quick Links)

தொடர்புடைய பதிவுகள்

அருள்மிகு  வாய்மூர்நாதர் திருக்கோயில், திருவாய்மூர்

அருள்மிகு வாய்மூர்நாதர் திருக்கோயில், திருவாய்மூர்

இறைவன்: வாய்மூர்நாதர்     இறைவி: பாலின் நன்மொழியாள்  தீர்த்தம்: சூரிய தீர்த்தம்   பாடியோர்: அப்பர், சம்பந்தர் கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 124 வது ஆலயம்.  விடங்கர் எழுந்தருளியிருக்கும் தலங்கள் 7ல் ஒன்று. இவர் நீலவிடங்கர்,...

அருள்மிகு மனத்துணைநாதர் திருக்கோயில், வலிவலம்

அருள்மிகு மனத்துணைநாதர் திருக்கோயில், வலிவலம்

இறைவன்: மனத்துணைநாதர்     இறைவி: மாழையொண்கண்ணி தீர்த்தம்: காரணர்கங்கை  பாடியோர்: அப்பர், சம்பந்தர், சுந்தரர்  கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 121 வது ஆலயம். இது வலியன் பூசித்த தலமாதலின் இப்பெயர்பெற்றது. வலியன் என்பது...

அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருக்குவளை

அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருக்குவளை

இறைவன்: பிரம்மபுரீஸ்வரர்      இறைவி: வண்டமர்பூங்குழலி  தீர்த்தம்: சந்திர நதி, பிரம்ம தீர்த்தம்  பாடியோர்: அப்பர், சம்பந்தர், சுந்தரர்  கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 123 வது ஆலயம்.  ஆதியில் பிரமன் சிருஷ்டி தொழிலைப்...