அருள்மிகு பால்வண்ணநாதர் திருக்கோயில், திருக்கழிப்பாலை

 

இறைவன்:
பால்வண்ணநாதர்
இறைவி:
வேதநாயகி
தீர்த்தம்:
பஞ்சகார தீர்த்தம்
பாடியோர்:
அப்பர், சம்பந்தர், சுந்தரர்

 

 கோயிலின் சிறப்புகள்:

      காவேரி வடகரை ஆலயங்களில் 4வது ஆலயம். தேவார பாடல் பெற்ற புராதன ஆலயம், கொள்ளிட வடகரையில் கரைமேடு என்ற இடத்தில இருந்ததாகவும், கொள்ளிட பெரு வெள்ளத்தில் கோயில் முழுவதும் சேதமடைந்து விட்டதால் மக்கள் சிவபுரியில் புதிதாக சிறிய ஆலயம் அமைத்துவிட்டார்கள். கபிலமுனிவர் வில்வ வனமாக இருந்த இந்த இடத்தில கோயில் கட்டி பூஜை செய்ய ஆர்வம் கொண்ட வேளையில் இப்பகுதியில் உள்ள பசுக்கள் தானாகவே பால் சுறந்த காரணத்தினால், மணல்கள் வெண்மையாக இருந்தன. முனிவர் இந்த வெண்மையான மணலினால் லிங்கம் செய்து வழிபாடு செய்தார். ஒருநாள் அவ்வழியே வந்த மன்னனின் குதிரை குளம்பு பட்டு லிங்கம் பிளந்து விடுகிறது. முனிவர் வருந்தி வேறு லிங்கம் செய்ய நினைக்க இறைவன் இறைவியுடன் தோன்றி பிளவு பட்ட லிங்கத்தையே பிரதிஷ்டை செய்யுமாறும், காமதேனுவே பசு வடிவில் பால் சொரிந்துள்ளதால் இந்த லிங்கத்தை வழிபடுவோர் அனைத்து செல்வமும் அடைவார்கள் என்று கூறினார்கள். இன்றும் பிளவு பட்ட லிங்கம் தான் காட்சி தருகிறது. சிவலிங்கம் சுயும்பு மூர்த்தி. சிவலிங்கத்திற்கு பின்புறம் சிவன் பார்வதி திருவுருவங்கள் திருமண கோலத்தில் உள்ளன. தலை திரும்பி காட்சி அளிக்கும் நந்தி தனி சிறப்பு. இங்கு பைரவர் காசியில் உள்ளது போலவே தனி கோயிலில் நாய் வாகனம் இன்றி காணப்படுகிறார். இந்த பைரவரை தரிசித்தால் காசி பைரவரை தரிசித்த புண்ணியம் கிடக்கும்.

  

தேவாரம்: 

வண்ணமும் வடிவும் சென்று கண்டிலள்
     எண்ணி நாமங்கள் ஏத்தி நிறைந்திலள்
கண்ணுலாம் பொழில் சூழ்கழிப் பாலையேம்
     அண்ணலேயறி வானிவள் தன்மை

 இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:

 இந்த கோயில் சிதம்பரத்திலிருந்து 8 K.M தொலைவில் உள்ளது. ஆட்டோ அல்லது காரில் செல்லலாம்.

 

 கோயில் முகவரி:

 அருள்மிகு பால்வண்ணநாதர் திருக்கோயில், திருக்கழிப்பாலை,

சிவபுரி அஞ்சல், அண்ணாமலைநகர் வழி , சிதம்பரம் வட்டம்,
கடலூர் மாவட்டம். 608002.

 

 தொலைபேசி:

 வைத்யநாத  குருக்கள், 04144 – 237265

இந்த பதிவை பகிர:

விரைவு இணைப்புகள்(Quick Links)

தொடர்புடைய பதிவுகள்

அருள்மிகு  வாய்மூர்நாதர் திருக்கோயில், திருவாய்மூர்

அருள்மிகு வாய்மூர்நாதர் திருக்கோயில், திருவாய்மூர்

இறைவன்: வாய்மூர்நாதர்     இறைவி: பாலின் நன்மொழியாள்  தீர்த்தம்: சூரிய தீர்த்தம்   பாடியோர்: அப்பர், சம்பந்தர் கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 124 வது ஆலயம்.  விடங்கர் எழுந்தருளியிருக்கும் தலங்கள் 7ல் ஒன்று. இவர் நீலவிடங்கர்,...

அருள்மிகு மனத்துணைநாதர் திருக்கோயில், வலிவலம்

அருள்மிகு மனத்துணைநாதர் திருக்கோயில், வலிவலம்

இறைவன்: மனத்துணைநாதர்     இறைவி: மாழையொண்கண்ணி தீர்த்தம்: காரணர்கங்கை  பாடியோர்: அப்பர், சம்பந்தர், சுந்தரர்  கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 121 வது ஆலயம். இது வலியன் பூசித்த தலமாதலின் இப்பெயர்பெற்றது. வலியன் என்பது...

அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருக்குவளை

அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருக்குவளை

இறைவன்: பிரம்மபுரீஸ்வரர்      இறைவி: வண்டமர்பூங்குழலி  தீர்த்தம்: சந்திர நதி, பிரம்ம தீர்த்தம்  பாடியோர்: அப்பர், சம்பந்தர், சுந்தரர்  கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 123 வது ஆலயம்.  ஆதியில் பிரமன் சிருஷ்டி தொழிலைப்...