இறைவன்: |
துயர்தீர்த்தநாதர், பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் |
இறைவி: |
பூங்கோடிநாயகி, புஷ்பலதாம்பிகை |
தீர்த்தம்: |
கொள்ளிடம் |
பாடியோர்: |
அப்பர், சம்பந்தர் |
கோயிலின் சிறப்புகள்:
கொள்ளிடத்தின் வடகரையில் அமைந்துள்ள ஆலயம். ஒரு முறை சிவபெருமானிடம் பார்வதிதேவி “ஒம்” என்னும் பிரணவ மந்திரத்தின் பொருள் அறிய உபதேசம் கேட்கும் பொழுது உமையின் கவனம் திசை திரும்பியது. கோபம் கொண்ட சிவபெருமான் தேவியை மானுட பிறவி எடுக்க சாபம் கொடுத்தார். உமாதேவியாரும் இத்தலத்துக்கு வந்து சரஸ்வதி தேவியை வணங்கி சிவனை நினைத்து இலந்தை மரத்தின் அடியில் கடும் தவம் இருந்தார். தவத்தை பாராட்டி, சிவன் தேவி விரும்பியபடியே இத்தலத்தில் சிவன், தட்சிணாமூர்த்தியாக உமயாள்பார்வதிக்கு “ஒம்” எண்ணும் பிரணவ மந்திரத்தின் பொருளை உபதேசித்தார். அப்போது அங்கு வந்த முருககடவுளை காவலுக்கு நின்ற நந்தி பெருமான் தடுக்க, முருகன் வண்டு உருவு எடுத்து கோமுகம் வழியாக சென்று உமையின் தலையில் உள்ள பூவில் அமர்ந்து இறைவன் உபதேசித்த மந்திரத்தை கேட்டு தெரிந்து கொண்டார். இதனால்தான் இவ்வூருக்கு ஓமாம்புலியூர் என்ற பெயர் வந்தது. ஒட்டு கேட்ட பிரணவ மந்திரத்தின் பொருளை பின்னால் சுவாமிமலையில் இறைவணக்கே முருகன் உபதேசித்தார்.
அப்பர் தனது பாடலில் இந்த தலத்தில் எப்போதும் ஹோமங்கள் நடந்து ஹோம புகையால் சூழபட்டதால் ஓமாம்புலியூர் என பெயர் பெற்றதாக கூறுகிறார். அனைத்து கோயில்களில் உள்ளது போன்றே இறைவன் சன்னதியில் தெற்கு நோக்கி ஒரு தட்சிணாமூர்த்தியும். இறைவன் மற்றும் அம்பாள் சன்னதிக்கு இடையில் மஹா மண்டபத்தில் தனி மூல ஸ்தானத்தில் ஞான குருவாக இன்னொரு தட்சிணாமூர்த்தியும் அருள் பாலிக்கிறார். இத்தலத்தில் இரண்டு தட்சிணாமூர்த்தி இருப்பது சிறப்பாகும். குருவுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இத்தலத்தில் வேறு நவக்கிரகங்கள் கிடையாது.
கருவறையில் உள்ள நடராஜர் சிலாருபம். வியாக்ரபாதருக்கு காட்சி தந்த வடிவம் என்று கூறபடுகிறது. ஆலயத்துக்கு எதிரே உள்ள கௌரி தீர்த்தத்தின் மறு பக்கத்தில் வடதளி என்ற சிறிய ஆலயம் உள்ளது. இறைவனின் பெயர் நாகவள்ளி சமேத வடதளிஸ்வரர். குழந்தைகளுடன் வந்து தட்சிணாமூர்த்திக்கு அபிஷேகம் செய்தால் கல்வி வேள்வியில் சிறந்து விளங்கலாம்.
தேவாரம்:
மலையானை வருமலையன்றுரி செய்தானை மறையானை மறைலும் அறிய வொண்ணக் கலையானைக் கலையாருங் கையினானைக் கடிவானை அடியார்கள் துயரமெல்லாம் உலையாத அந்தணர்கள் வாழுமோமாம் புலியூரெம் உத்தமனைப் புரம் மூன்றேய்த சிலையானை வடதளியேங் செல்வன் தன்னை சேராதே திகைத்துநாள் செலுத்தினேனே
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
இந்த தலம் சிதம்பரத்திலிருந்து 30 கி.மி. தொலைவிலும் காட்டுமன்னர்குடியிலிருந்து 6 கி.மி தொலைவில் உள்ளது. பஸ் வசதியுண்டு.
கோயில் முகவரி:
அருள்மிகு துயர்தீர்த்தநாதர் ஆலயம், ஓமாம்புலியூர் & அஞ்சல், காட்டுமன்னர்குடி வட்டம், கடலூர் மாவட்டம். 608306.
தொலைபேசி:
ஒ.வெ.ஜெகதீசகுருக்கள் – 99426 34949, 04144 – 264845