இறைவன்: |
பதஞ்சலி ஈஸ்வரர் |
இறைவி: |
கோல்வளைக்கையம்பிகை (கானர்குழலி அம்மை) |
தீர்த்தம்: |
சூரியபுஷ்கரனி |
பாடியோர்: |
சுந்தரர் |
கோயிலின் சிறப்புகள்:
தேவார பாடல் பெற்ற காவேரி வடகரை ஆலயங்களில் 32 வது ஆலயம். பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் விஷ்ணு பகவான் தன்னை தாங்கி கொண்டிருக்கும் ஆதிசேஷனின் விருப்பமான சிவபெருமானின் திருநடனத்தை காணுவதற்காக பூமியில் பதஞ்சலியாக தவம் செய்ய பணித்தார். தவத்தை மெச்சிய சிவபெருமான் சிதம்பரத்தில் தன்னுடைய திருநடன காட்சியை பதஞ்சலி முனிவர்க்கு காட்டி அருளினார். பதஞ்சலி முனிவர் ஒரு முறை இத்தலத்தில் தவம் இருந்து இங்கும் சிவபெருமானின் நடன காட்சி காண விரும்பியபடியால், இங்கும் சிவபெருமான் அவருக்கு திருநடன காட்சியை காட்டி அருளினார். இத்தலத்தில் பதஞ்சலி ஈஸ்வரர் என்ற திருப்பெயரையும் பெற்றார்.
தமிழ் வருட பிறப்பின் பொழுது 3 நாட்கள் சூரியன் தன் ஒளியை சுவாமியின் மீது பரப்பி பூஜிக்கிறார்.
தேவாரம்:
விடை அரவக்கொடி ஏந்தும் விண்ணவர் தம் கோனை வெள்ளத்து மாலவனும் வேத முதலானும் அடியிணையும் திருமுடியும் காண அரிதாய சங்கரனைத் தத்துவனைத் தையல் மடவார்கள் உடை அவிழக் குழல் அவிழக் கோதை குடைந்தாடக் குங்குடங்கள் உந்தி வரும் கொள்ளிடத்தின் கரைமேல் கடைகள் விடுவார் குவளை களைவாருங் கழனிக் கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
இந்த தலம் சிதம்பரத்திலிருந்து 30 கி.மி. காட்டுமன்னர்குடியிலிருந்து 8 கி.மி தொலைவில் உள்ளது. பஸ் வசதியுண்டு.
கோயில் முகவரி:
அருள்மிகு பதஞ்சலி ஈஸ்வரர் திருக்கோயில், கானாட்டம்புலியூர், முட்டம் அஞ்சல், ஆயங்குடி வழி, காட்டுமன்னர்குடி வட்டம், கடலூர் மாவட்டம். 608306.
தொலைபேசி:
சி.சுந்தரத்தாண்டவன், ஒய்வு பெற்ற ஆசிரியர், 04144 – 208091