அருள்மிகு பாலமுருகன் கோயில், ரத்தினகிரி

எழுதியவர்: தி.ஜெ.ரா

கோயிலின் சிறப்புகள்:

      இத்தலத்தில் உள்ள முருகன் குழந்தை வடிவில் பாலமுருகனாய் காட்சி தருகிறார். குன்றிருக்கும் இடமெல்லாம் முருகன் இருப்பான் என்ற முதுமொழிக்கு ஏற்ப இக்கோயில் ஒரு சிறிய குன்றின்மேல் அமைந்துள்ளது. இத்தலத்து முருகனுக்கு பூஜையின் போது மலர்கள், நெய்வேத்தியம், தீபாராதனை, பூஜை செய்யும் அர்ச்சகர் இவை அனைத்தும் ஆறு என்ற எண்ணிக்கையில் இருப்பது சிறப்பு. ஐப்பசி மாத பௌர்ணமியில் சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்வர் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அதே நாளில் முருகனுக்கும் அன்னாபிஷேகம் செய்வது இந்த ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் மட்டுமே. சிவனிலிருந்து தோன்றிய சிவ அம்சமாதலால் முருகனுக்கும் அன்னாபிஷேகம் செய்கின்றனர். ஆடி கிருத்திகை அன்று முருகன் ஊர் பெயருக்கேற்ப ரத்தினங்களால் ஆன ஆடை அணிந்து காட்சி தருவது சிறப்பாகும். முருகன் இங்கு பால வடிவில் இருப்பதால் கந்த சஷ்டியன்று சூரசம்ஹாரம் நடப்பதில்லை. அருணகிரிநாதரால் பாடல் பெற்ற தலம் இது என்பது இத்தலத்தின் மேலும் ஒரு சிறப்பாகும்.

 

 பலன்கள்:

 இத்தலத்தில் உள்ள வராஹி அம்மனை வளர்பிறை பஞ்சமியில், வாழை இலையில் அரிசி, தேங்காய், வெற்றிலை, பழம் வைத்து நெய் தீபமேற்றி வேண்டினால் திருமணத்தடை நீங்கும் என்பது ஐதீகம்.

 

 இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:

 இத்தலம் ஆற்காட்டிலிருந்து வேலூர் செல்லும் வழியில் 10Km தொலைவில் உள்ளது. வேலூர் மற்றும் ஆற்காட்டிலிருந்து நகர பேருந்துகள் உள்ளன. சென்னையிலிருந்து வேலூர் செல்லும் பேருந்திலும் இத்தலத்திற்கு செல்லலாம்.

 

கோயில் திறந்திருக்கும் நேரம்:

 காலை 6.30 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மற்றும் மாலை 3.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை

 

கோயிலின் முகவரி:

அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில், ரத்தினகிரி, வேலூர் மாவட்டம் 632517.

 

தொலைபேசி:

04172 266350, 266330

 

இந்த பதிவை பகிர:

விரைவு இணைப்புகள்(Quick Links)

தொடர்புடைய பதிவுகள்

அருள்மிகு ஜலகண்டேஸ்வரர் கோயில், வேலூர்

அருள்மிகு ஜலகண்டேஸ்வரர் கோயில், வேலூர்

கோயிலின் சிறப்புகள்:      இத்தலத்தில் இறைவன் ஜலகண்டேஸ்வரர் என்கின்ற திருநாமத்துடன் வீற்றிருந்து அருள்புரிகிறார். இக்கோயில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும், பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முத்தேவியரும் அருளும் தலமாகும். சப்தரிஷிகளில் ஒருவரான அத்திரி...

அருள்மிகு பாலா திரிபுரசுந்தரி கோயில், நெமிலி

அருள்மிகு பாலா திரிபுரசுந்தரி கோயில், நெமிலி

கோயிலின் சிறப்புகள்:      இத்தலத்தில் உலகாளும் அம்மையான லலிதாம்பிகையின் மகளான பாலா திரிபுரசுந்தரி அருள்புரிகிறாள். முன்னொரு காலத்தில் பண்டாசுரன் என்னும் அசுரன் லலிதாம்பிகையோடு போரிட்டு தோற்றான். அவனுக்கு முப்பது புத்திரர்கள் இருந்தனர். அவர்களையும் அழித்தால் தான்...

அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில், திருப்போரூர்

அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில், திருப்போரூர்

கோயிலின் சிறப்புகள்:      இத்தலத்தில் முருகப் பெருமான் கந்தசுவாமி என்ற பெயருடன் சுயம்பு மூர்த்தியாய் வீற்றிருந்து அருள்புரிகிறார். முருகப்பெருமான் அசுரர்களை அழிக்க அவர்களுடன் மூன்று இடங்களில் போரிட்டார். திருச்செந்தூரில் கடலில் போரிட்டு மாயையை அடக்கினார்....