கோயிலின் சிறப்புகள்:
இக்கோயிலில் பெருமாள் மாதவப் பெருமாள் என்ற திருநாமத்துடன் வீற்றிருந்து அருள்புரிகிறார். ஒரு சமயம் திருமாலின் சாந்த குணத்தை சோதிக்கச்சென்ற பிருகு மகரிஷி அவரது மார்பில் உதைக்கச் சென்றார். இதனால் கோபம் கொண்ட மகாலட்சுமி சுவாமியை விட்டுப் பிரிந்தார். தன் தவறுக்கு பிராயச்சித்தம் பெற விரும்பிய பிருகு மகரிஷி மகாலட்சுமியே தனக்கு மகளாக பிறக்க வேண்டி இத்தலத்தில் தவமிருந்தார். மகாலட்சுமி இங்குள்ள தீர்த்தத்தில் குழந்தையாக அவதரித்தாள். லட்சுமி அமுதம் கடைந்த பாற்கடலில் இருந்து தோன்றியவள் என்பதால் இவளுக்கு அமிர்தவல்லி என்ற பெயரால் அழைக்கப்படுகிறார். அவள் திருமண வயதை அடைந்தபோது, அவளை மணந்து கொள்ளும்படி திருமாலிடம் பிருகு மகரிஷி வேண்டினார். அவரும் இங்கு வந்து தாயாரை மணந்து கொண்டார். பிருகுவின் வேண்டுதலுக்காக சுவாமியும், தாயாரும் இங்கு எழுந்தருளினர். இது பேயாழ்வார் அவதரித்த தலமாகும். இவருக்கு இக்கோயிலில் தனிச்சன்னதி இருக்கிறது. ஐப்பசி சதயம் நட்சத்திரத்தையொட்டி இவருக்கு 10 நாள் திருவிழா நடக்கிறது. திருமழிசையாழ்வார், இத்தலத்தில் பேயாழ்வாரிடம் சீடராக இருந்து ஞான உபதேசம் பெற்றார் என்பதும் இத்தலத்தின் சிறப்பாகும்.
பலன்கள்:
திருமணத்தடை உள்ளவர்கள் இத்தலத்தில் வேண்டிக்கொள்ள நல்ல வரன் அமையும் என்பது நம்பிக்கை.
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
சென்னை மயிலாப்பூரில் இக்கோயில் உள்ளது. மயிலாப்பூருக்கு சென்னையின் அணைத்து இடங்களிலிருந்தும் மாநகரப் பேருந்துகள் உள்ளன.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 6.30 மணி முதல் மதியம் 11.00 மணி வரை
மாலை 4.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை
கோயில் முகவரி:
அருள்மிகு மாதவப்பெருமாள் திருக்கோயில், மயிலாப்பூர், சென்னை – 600 004.
தொலைபேசி:
044-2498 5112, 2466 2039, 94440 18239