அருள்மிகு லோகநாத பெருமாள் திருக்கோயில், திருக்கண்ணங்குடி

இறைவன்:
லோகநாத பெருமாள்
இறைவி:
லோகநாயகி தாயார்
தீர்த்தம்:
சிரவண புஷ்கரணி தீர்த்தம்
மங்களாசாசனம்:
திருமங்கையாழ்வார்

கோயிலின் சிறப்புகள்:

     மங்களாசாசனம் பெற்ற திருத்தலங்களில் இது 18வது திருத்தலம். காயாமகிழ், உறங்காப்புளி, தேறா வழக்கு, உறா கிணறு திருக்கண்ணங்குடி என்பது பழமொழி. உறங்காப்புளியும் ஊறா கிணறும் இப்போது இல்லை. காய்ந்து பட்டு போகாத வரம் பெற்ற ஸ்தல விருக்ஷமான மகிழ மரம் கோவிலுக்கு பின்புறம் உள்ளது. தாயார் சன்னதியில் மூலவரும் உற்சவரும் ஒரே முக சாடையில் இருப்பது எங்கும் காணமுடியாத அதிசயம். கிருஷ்ண பக்தி நிறைந்த வசிஸ்டர் வெண்ணெய் மயமான கிருஷ்ணரை இளகாமல் விக்ரமாக வழிபட்டுவந்தார். பக்தியை மெய்ச்சிய கண்ணபிரான் குழந்தையாக கோபாலன் அவர் வழிபட்ட கிருஷ்ணனை உண்டுவி ட்டார். கிருஷ்ணனை வசிஸ்டர் விரட்ட மகிஷ மரத்தடியில் தவம் செய்து கொண்டு இருந்த ரிஷிகள் இருந்த பகுதிக்கு வந்தார் இதை ஞான திருஷ்டியால் உணர்ந்த ரிஷிகள் கண்ணனை பக்தியாகிய பாச கயிற்றால் கட்டிபோட்டனர். ரிஷிகளின் வேண்டுகோளுக்கு இணங்கி இத்தலத்தில் அருள்பாலிக்கிறார். விரட்டி வந்த வசிஷ்டர் கண்ணனின் பாதத்தில்சரண் அடைந்தார். கண்ணன் கட்டுண்டு நின்றபடியால் கண்ணங்குடி ஆயிற்று. இங்கு திருநீரணி விழா நடைபெறுகிறது. இந்த விழாவின் போது பெருமாள் விபூதி அணிந்து மூன்றே முக்கால் நாழி மட்டும் காட்சி தருவார். பக்தகோடிகளும் விபூதி அணிந்து வருவார். சிவ வைஷ்ணவ ஒற்றுமை. உபரிசரவசு மன்னனுக்காக நடைபெறும் விழா இது.

பஞ்சகிருஷ்ண தலங்கள்:

     தமிழ்நாட்டிலுள்ள தமிழ்நாட்டிலுள்ள பஞ்சகிருஷ்ண தலங்களில் இத்தலமும் ஒன்று. ஏனைய நான்கு பஞ்சகிருஷ்ண தலங்கள் கபிஸ்தலம், திருக்கோவிலூர், திருக்கண்ணபுரம், திருக்கண்ணமங்கை ஆகிய ஊர்களிலுள்ள பெருமாள் கோவில்கள் ஆகும்.

பிரபந்தம்:

வங்கமா முந்நீர் வரி நிறப் பெரிய வாளரவினணை
     மேவி சங்கமார் அங்கைத்தடமலருந்திச் சாமமாமேனி
என்தலைவன் அங்கமாறு ஐந்து வேள்வி
     நால்வேதம் அருங்கலைபயின்றுஎரி மூன்றும் 
மங்கையால் வளர்க்கும் துளக்கமில் மனத்தோர்
     திருக்கண்ணங் குடியுள் நின்றானே

இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:

திருவாரூரிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் சாலையில் உள்ள கீழ்வேளூரிலிருந்து 2 கி.மீ. தொலைவில் இக்கோயில் உள்ளது.

கோயில் திறந்திருக்கும் நேரம்:

காலை    8.00  – 11.30  மற்றும் மாலை  5.00   – 8.00

கோயிலின் முகவரி:

அருள்மிகு லோகநாத பெருமாள் திருக்கோயில், திருக்கண்ணங்குடி, நாகப்பட்டினம் மாவட்டம் 611104.

தொலைபேசி:

04365 245350

இந்த பதிவை பகிர:

விரைவு இணைப்புகள்(Quick Links)

தொடர்புடைய பதிவுகள்

அருள்மிகு  வாய்மூர்நாதர் திருக்கோயில், திருவாய்மூர்

அருள்மிகு வாய்மூர்நாதர் திருக்கோயில், திருவாய்மூர்

இறைவன்: வாய்மூர்நாதர்     இறைவி: பாலின் நன்மொழியாள்  தீர்த்தம்: சூரிய தீர்த்தம்   பாடியோர்: அப்பர், சம்பந்தர் கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 124 வது ஆலயம்.  விடங்கர் எழுந்தருளியிருக்கும் தலங்கள் 7ல் ஒன்று. இவர் நீலவிடங்கர்,...

அருள்மிகு மனத்துணைநாதர் திருக்கோயில், வலிவலம்

அருள்மிகு மனத்துணைநாதர் திருக்கோயில், வலிவலம்

இறைவன்: மனத்துணைநாதர்     இறைவி: மாழையொண்கண்ணி தீர்த்தம்: காரணர்கங்கை  பாடியோர்: அப்பர், சம்பந்தர், சுந்தரர்  கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 121 வது ஆலயம். இது வலியன் பூசித்த தலமாதலின் இப்பெயர்பெற்றது. வலியன் என்பது...

அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருக்குவளை

அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருக்குவளை

இறைவன்: பிரம்மபுரீஸ்வரர்      இறைவி: வண்டமர்பூங்குழலி  தீர்த்தம்: சந்திர நதி, பிரம்ம தீர்த்தம்  பாடியோர்: அப்பர், சம்பந்தர், சுந்தரர்  கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 123 வது ஆலயம்.  ஆதியில் பிரமன் சிருஷ்டி தொழிலைப்...