இறைவன்: | நீலகண்டேஸ்வரர் |
இறைவி: | அமிர்தவல்லி அம்மன் |
தீர்த்தம்: | பிரம்ம தீர்த்தம் |
பாடியோர்: | சுந்தரர் |
கோயிலின் சிறப்புகள்:
தேவார பாடல் பெற்ற காவிரி வடகரை ஆலயங்களில் 30 வது ஆலயம். சிவபெருமான் ஆலகால விஷத்தை அருந்தியபோது அம்மன் அவரது கண்டத்தைக் கையால் பற்றி விஷத்தை உள்ளே போகாது செய்தருள, இறைவர் நீலகண்டம் காட்டியருளிய பதி. இதற்கு ஏற்ப ‘திருநீலமிடற்றெம்பிரான்’ என்று பதிகத்திலும் குறிப்பு உள்ளது.
திரௌபதி வழிபட்ட வலம்புரி விநாயகரும் அருகில் இடம்புரி விநாயகரும் உள்ள தளம்.தலம். பாண்டவர் பூசித்த ஐந்து இலிங்கங்கள் உள்ளன. இங்கு ஐந்து சிவன் சன்னதிகள் உள்ளது. தருமர் வழிபட்ட நீலகண்டேஸ்வரர், அர்ஜுனன்வழிபட்ட படிக்கரைநாதர், பீமனால் வழிபட்ட 16 பட்டைகளுடன் கூடிய மகதீஸ்வரர், நகுலன் வழிபட்ட பரமேஸ்வரர், சகாதேவன் வழிபட்ட முத்து கிரீஸ்வரர் ஆகிய ஐந்து கோயில்கள். இங்கு சனியை வேண்டினால் நல்ல பலன் கிடைக்கும்.
தேவாரம்:
படைக்கட் சூலம் பயிலவல் லானைப்
பாவிப் பார்மனம் பாவிக்கொண் டானைக்
கடைக்கட்பிச் சைக்கிச்சை காதலித் தானைக்
காமன்ஆ கந்தனைக் கட்டழித் தானைச்
சடைக்கட் கங்கையைத் தாழவைத் தானைத்
தண்ணீர்மண் ணிக்கரை யானைத்தக் கானை
மடைக்கண்நீ லம்மலர் வாழ்கொளி புத்தூர்
மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
மயிலாடுதுறையில் இருந்து 13.கி.மீ. தொலைவில் உள்ள மணல்மேட்டிலிருந்து 1.கி.மீ. தொலைவில் இக்கோயில் உள்ளது. மயிலாடுதுறையில் இருந்து பேருந்துகள் உள்ளன.
தங்கும் வசதி:
மயிலாடுதுறையில் தங்கி அங்கிருந்து செல்லலாம்.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 7.00 – 12.00 மற்றும் மாலை 4.00 – 8.00
கோயிலின் முகவரி:
அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில், இலுப்பைப்பட்டு, மயிலாடுதுறை மாவட்டம் 609202.
தொலைபேசி:
சபேச சிவாச்சாரியார்: 9245619738
கணபதி சுப்ரமணிய சிவாச்சாரியார்: 9976217869