கோயிலின் சிறப்புகள்:
இத்தலத்தில் பெருமாள் பாண்டுரங்கன் என்ற திருநாமத்தோடு நின்ற கோலத்தில் அருள்புரிகிறார். இவரது சிலை 12 அடி உயர சாளகிராமதினால் ஆனதாகும். இக்கோயில் ஒரிசா மாநிலத்தில் உள்ள பூரி ஜகந்நாதர் கோயிலைப் போலவே கட்டப்பட்டுள்ளது. 120 அடி உயரத்தில் கோபுரமும் ஒன்பதரை அடி உயரத்தில் தங்க கலசமும், அதன் மேல் சுதர்சன சக் கரமும், காவிக்கொடியும் பார்ப்பவரை பிரமிக்க வைக்கும் விதத்தில் அமைந்துள்ளது. பாண்டுரங்கன் இத்தலத்தில் ஞாயிற்றுகிழமையில் மதுராபுரி ஆளும் மன்னன் அலங்காரத்திலும், வியாழக்கிழமையில் பாண்டுரங்க அலங்காரத்திலும், வெள்ளியன்று வெள்ளிக்கவச அலங்காரத்திலும், சனிக்கிழமை திருப்பதி வெங்கடாஜலபதி அலங்காரத்திலும் அருள்புரிவது சிறப்பாகும். வட மாநிலங்களில் மட்டுமே காணப்படும் தமால மரம் இத்தலத்தின் விருட்சமாக இருப்பது மிகவும் சிறப்பாகும்.
பலன்கள்:
இத்தலத்து பாண்டுரங்கனை வேண்டினால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
வந்தவாசியிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் சாலையில் வந்தவாசியிலிருந்து 6 KM தொலைவில் இவ்வாலயம் உள்ளது. வந்தவாசியிலிருந்து பேருந்துகள் உள்ளன.
காஞ்சிபுரத்திலிருந்து 35 Km தொலைவில் உள்ளது.
தங்கும் வசதி:
காஞ்சிபுரத்தில் தங்கி அங்கிருந்து செல்லலாம். வந்தவாசியிலும் தங்கும் விடுதிகள் உள்ளன.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 6.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை
மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை
கோயில் முகவரி:
அருள்மிகு பாண்டுரங்கன் திருக்கோயில், தென்னாங்கூர், திருவண்ணாமலை மாவட்டம் – 604 408.
தொலைபேசி:
04183-225 808