இறைவன்: |
வேதபுரீஸ்வரர், வேதநாதர் |
இறைவி: |
பாலகுஜாம்பிகை, இளமுலைநாயகி |
தீர்த்தம்: |
கல்யாண கோடி குளம் |
பாடியோர்: |
சம்பந்தர் |
கோயிலின் சிறப்புகள்:
தேவார பாடல் பெற்ற தொண்டை நாட்டு ஆலயங்களில் 8 வது ஆலயம். சிவபெருமான் இத்தலத்தில் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் வேதத்தை அருளிச் செய்தமையால் இத்தலம் ஓத்தூர் எனப் பெயர் பெற்றது. “திரு” அடைமொழி சேர்ந்து திருஓத்தூர், திருவோத்தூர் என்றாயிற்று. . நந்தி சுவாமியை நோக்கியிராமல் முன் கோபுரத்தைப் பார்த்தபடி காட்சியளிக்கறது. இறைவனன் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் வேதத்தை ஓதுவிக்கும் போது தக்கவர் தவிர வேறு யாரும் உள்ளே வராமல் தடுக்கவே இவ்வாறு நந்தி திரும்பி இருப்பதாக கூறப்படுகிறது. இறைவன் சுயம்புலிங்கமாக வேதபுரீஸ்வரர் என்ற பெயருடன் காட்சி அளிக்கிறார். ஆவுடை சதுர வடிவமான அமைப்புடையது. சிவபெருமான் வீர நடனம் புரிந்த தலம் இதுவாகும்.. பனையைத் தலமரமாகக் கொண்ட பாடல் பெற்ற தலங்கள் ஐந்தினுள் இதுவும் ஒன்று. ஏனையவை (1) திருப்பனந்தாள் (2) திருப்பனையூர் (3) திருவன்பார்த்தான் பனங்காட்டூர் (திருப்பனங்காடு) (4) புறவார் பனங்காட்டூர் என்பன. உள் சுற்றுப் பிராகாரத்தில் தென்கிழக்கில் கருங்கல்லால் ஆன பனைமரமும், அதனடியில் ஒரு சிவலிங்கமும், சம்பந்தர் ஆண்பனை பெண்பனையாகுமாறு பாடிக்கொண்டு நிற்கும் காட்சியும் ஐதிகச் சிற்பமாக அமைந்து விளங்குவதைக் காணலாம்.. சிவனடியார் ஒருவர் வளர்த்து அனைத்து பனை மரங்களும் ஆண் மரங்களாக இருத்தால் சமணர்கள் அவரை கேலி செய்தனர். வேதனை அடைந்த சிவனடியார் இத்தலத்திற்கு வந்த சம்பந்தரிடம் முறையிட சம்பந்தரும் பதிகம் பாடி ஆண் பனைகளை பெண் பனைகளாக மாற்றி காய்க்க வைத்தார். இத்தலத்தில் வழிபட்டால் மனத்துயரம் நீங்கும்.. இத்தலத்தில் தலமரமாக உள்ள பனைமரத்தின் பனம்பழங்களை சாப்பிட்டால் குழந்தைபாக்கியம் கண்டிப்பாக கிடைக்கிறது.
தேவாரம்:
பூத்தேர்ந் தாயன கொண்டுநின் பொன்னடி
ஏத்தா தாரில்லை யெண்ணுங்கால்
ஓத்தூர் மேய வொளிமழு வாளங்கைக்
கூத்தீ ரும்ம குணங்களே.
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
காஞ்சிபுரத்திலிருந்து 28 கி.மீ. தொலைவில் செய்யாறு உள்ளது. காஞ்சியிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 5.30 – 12.00 மற்றும் மாலை 3.30 – 8.00
கோயிலின் முகவரி:
அருள்மிகு வேதபுரீசுவரர் திருக்கோயில், செய்யாறு, திருவோத்தூர்- திருவத்திபுரம், திருவண்ணாமலை மாவட்டம். 604 407.
தொலைபேசி:
கந்தசாமி குருக்கள் 94433 45793, O3182-224387