அருள்மிகு திரிவிக்ரமர் திருக்கோயில், சீர்காழி

 

இறைவன்:
திருவிக்ரம நாராயணர்
இறைவி:
லோகநாயகி
தீர்த்தம்:
சங்கு சக்கர தீர்த்தம்
தலவிருட்சம்:
பலா
மங்களாசாசனம்:
திருமங்கை ஆழ்வார், ஆண்டாள்

 

 கோயிலின் சிறப்புகள்:

      மங்களசாசனம்  பெற்ற திருத்தலங்களில் இது 28வது  திவ்யதேசம். மூலவர் திரிவிக்கிரமராக இடது காலைத் தலைக்கு மேல் தூக்கியபடியும் வலது கையை தானம்பெற்ற கோலத்திலும் இடக்கையை அடுத்த அடி எங்கே என ஒரு விரலைத் தூக்கியபடியும் அமைந்துள்ளார்.  தாள் என்றால் உலகம் ஆளான்   என்றால்  ஆளுபவன்  என்று பொருள்.  தன்  திருவடியால் மூன்று உலகத்தையும் அளந்தவர் என்பதால் ஆண்டாள் நாச்சியார்  தாடாளன்  என்று பாடுகிறார். உற்சவர் தாடாளன் வைகுண்ட ஏகாதசியன்று மட்டுமே காட்சி தருகின்றார். இவருக்கு  தவிட்டு பானை தாடாளன்  என்றும் பெயர்.

       திரிவிக்கிரம கோலத்தில் பெருமாள் ஒருபாதத்தை  தூக்கியபோது , பாதம் நோகுமே என்று அவரை பதக்கமாகத் தாயார் தாங்குவதாக மரபு. இத்திருத்தல தாயார் தரிசனம் காணும் பெண்கள் கணவரிடம் அன்பு காட்டுவர் என்பது தொன்நம்பிக்கை.

       திருமங்கையாழ்வாருக்கும் திருஞானசம்பந்தருக்கும் இடையேயான வாதப்போட்டியில் ஆழ்வார் வெற்றி பெற்றதால், திருமங்கையாழ்வாரைப் பாராட்டி தமது வேலை திருஞானசம்பந்தர் அளித்த திருத்தலம். திருவாழி – திருநகரி திருத்தலத்தில் இந்த வேலை வைத்தபடி திருமங்கையாழ்வார் காட்சி தருகிறார். பிரம்மாவுக்கு  தன்  ஆயுளை  பற்றி கர்வம் ஏற்பட்டபோது ரோமசமுனிவர்  “உன் ஆயுசும்  எனது  ஒரு  ரோமமும்  சமம்“ என்று சொல்லி ப்ரம்மா  கர்வம்  அடைக்கிய  தலம்.

  

பிரபந்தம்: 

நான்முகன்நாள் மிகைத்தருக்கை இருக்கு வாய்மை
     நலமிகுசீர் உரோமசனால் நவிற்றி நக்கன்
ஊன்முகமார்தலையோட்டூண்ஒழித்தஎந்தை
     ஒளிமலர்ச்சேவடியணைவீர்! உழுசேயோடச்
சூல்முகமார்வளையளைவாய் உகுத்த முத்தைத்
     தொல்குருகுசினையென்னச்சூழ்ந்தியங்க எங்கும்
தேன்முகமார்கமலவயல்சேல்பாய் காழிச்
     சீராம விண்ணகரேசேர்மினீரே

 இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:

  மயிலாடுதுறை சிதம்பரம் சாலையில் மயிலாடுதுறையில் இருந்து 20 கி.மீ. தொலைவில் இக்கோயில் உள்ளது.

  

கோயில் திறந்திருக்கும் நேரம்:

  காலை 7.30  –  11.30  மாலை  4.30  –  8.00

 

கோயில் முகவரி:

  அருள்மிகு திருவிக்ரமர் திருக்கோயில், சீர்காழி 609110.

  

தொலைபேசி:

  04364 270207, 9442419989

  

அருகிலுள்ள கோயில்கள்:

  சீர்காழி சட்டைநாதர் கோயில், திருக்கோலக்கா

இந்த பதிவை பகிர:

விரைவு இணைப்புகள்(Quick Links)

தொடர்புடைய பதிவுகள்

அருள்மிகு வைகல்நாதேஸ்வரர் திருக்கோயில், திருவைகல்

அருள்மிகு வைகல்நாதேஸ்வரர் திருக்கோயில், திருவைகல்

இறைவன்: வைகல்நாதேஸ்வரர் இறைவி: கொம்பியல் கோதை அம்மன்  தீர்த்தம்: செண்பக தீர்த்தம்  பாடியோர்: சம்பந்தர்       கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 33 வது ஆலயம். வைகல் என்னும் ஊரில் மாடக்கோயில் அமைப்பில் அமைந்த காரணத்தால் இப்பெயர்...

அருள்மிகு உமாமகேஸ்வரர் திருக்கோயில், கோனேரிராஜபுரம்

அருள்மிகு உமாமகேஸ்வரர் திருக்கோயில், கோனேரிராஜபுரம்

இறைவன்: உமாமகேஸ்வரர்                               இறைவி: அங்கவளநாயகி தீர்த்தம்: பிரம்ம தீர்த்தம்  பாடியோர்: சம்பந்தர்       கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 34 வது ஆலயம். முகப்பு மண்டபத்தின் விதானத்தில் அழகிய வண்ண ஓவியங்கள்...

அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில், தேரழுந்தூர்

அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில், தேரழுந்தூர்

இறைவன்: வேதபுரீஸ்வரர்                              இறைவி: சௌந்தராம்பிகை  தீர்த்தம்: வேத தீர்த்தம்  பாடியோர்: சம்பந்தர்       கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 38 வது ஆலயம். அகத்தியர் இறைவனை வழிபடும்போது அதை அறியாத மன்னன்...