அருள்மிகு யோகராமர் திருக்கோயில், படவேடு

எழுதியவர்: தி.ஜெ.ரா

கோயிலின் சிறப்புகள்:

     இத்தலத்தில் ராமபிரான் புஷ்பக விமானத்தின் கீழ், வீராசனத்தில் அமர்ந்து, சின்முத்திரை காட்டிய வலது கையை மார்பில் வைத்து யோக நிலையில் காட்சி தருகிறார். இது போன்ற அமைப்பை காண்பது அரிதாகும். ராமர், சீதை இருவரின் சிலையும் ஒரே கல்லில், ஒரே பீடத்தில் அமர்ந்தபடி வடிக்கப்பட்டுள்ளது. சுவாமிக்கு அருகில், ஆஞ்சநேயர் அமர்ந்து கையில் ஓலைச்சுவடி வைத்திருக்கிறார். ஆஞ்சநேயருக்கு ஆசிரியராக இருந்து உபதேசம் செய்தவர் என்பதால், இவர் இங்கு குரு அம்சமாக போற்றப்படுகிறார். எனவே, சக்கரவர்த்திக்குரிய போர் ஆயுதங்கள் எதுவும் இல்லை. வால்மீகி இயற்றிய ராமாயணத்தின் முதல் ஸ்லோகத்தில், ராமபிரான் யோக ராமச்சந்திரனாக இருக்கும் அமைப்பைப் பற்றி பாடியுள்ளார். இந்த ஸ்லோகத்தின் பொருளை உணர்த்தும்விதமாக அமைந்த கோயில் இது. இவர் உலகின் நிரந்தரமான மெய்ஞான நிலையை உணர்த்தும் கோலத்தில் இருப்பவர் என்பதால், நிலையான இன்பமான மோட்சம் கிடைக்க மட்டுமே இவரை வழிபடுகிறார்கள். இதனால், இங்கு சொர்க்கவாசல் கிடையாது. வைகுண்ட ஏகாதசியன்று சுவாமிக்கு விசேஷ பூஜை மட்டும் நடக்கும்.

பலன்கள்:

கல்வி, கலைகளில் உயர்வான நிலை பெற, ஞாபகமறதி நீங்க, ஞானம் உண்டாக  இத்தல ராமரை வழிபட்டு பலனடையலாம் என்பது நம்பிக்கை. 

இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:

வேலூரிலிருந்து போளூர் செல்லும் சாலையில் 32 KM தொலைவில் உள்ள சந்தவாசல் என்னும் இடத்திலிருந்து 7 KM தொலைவில் இக்கோயில் உள்ளது. வேலூரிலிருந்து பேருந்துகள் உள்ளன. சந்தவாசலிலிருந்து ஆட்டோ வசதிகள் உள்ளன. 

தங்கும் வசதி:

அருகிலுள்ள வேலூரில் தங்கி அங்கிருந்து செல்லலாம். வேலூரில் ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன. 

 

கோயில் திறந்திருக்கும் நேரம்:

காலை 7.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை

மாலை 3.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை 

கோயில் முகவரி: 

அருள்மிகு யோகராமர் திருக்கோயில், படவேடு, திருவண்ணாமலை மாவட்டம் – 606905

தொலைபேசி: 

04181-248 224, 94435 40660

இந்த பதிவை பகிர:

விரைவு இணைப்புகள்(Quick Links)

தொடர்புடைய பதிவுகள்

அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில், குரங்கணில்முட்டம்

அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில், குரங்கணில்முட்டம்

இறைவன்: வாலீஸ்வரர் இறைவி: இறையார் வளையம்மை தீர்த்தம்: காக்கை தீர்த்தம் பாடியோர்: சம்பந்தர் கோயிலின் சிறப்புகள்:      தேவார பாடல் பெற்ற தொண்டை நாட்டு ஆலயங்களில் 6 வது ஆலயம். எமன் மார்க்கண்டேயர் மீது பாசக்கயிறை வீசவே அக்கயிறு தவறுதலாக சிவன் மீது விழுந்தது. தன் பணியை...

அருள்மிகு தாளபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்பனங்காடு

அருள்மிகு தாளபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்பனங்காடு

  இறைவன்: தாளபுரீஸ்வரர், கிருபாநாதேஸ்வரர் இறைவி: அமிர்தவல்லி, கிருபாநாயகி தீர்த்தம்: சடாகங்கை பாடியோர்: சுந்தரர்     கோயிலின் சிறப்புகள்:       தேவார பாடல் பெற்ற தொண்டை நாட்டு ஆலயங்களில் 9 வது ஆலயம். கயிலை மலையில் சிவன் பார்வதி கல்யாணம் நடைபெறும் சமயம் தேவர்கள்...

அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில், செய்யாறு

அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில், செய்யாறு

இறைவன்: வேதபுரீஸ்வரர், வேதநாதர் இறைவி: பாலகுஜாம்பிகை, இளமுலைநாயகி தீர்த்தம்: கல்யாண கோடி குளம் பாடியோர்: சம்பந்தர் கோயிலின் சிறப்புகள்:      தேவார பாடல் பெற்ற தொண்டை நாட்டு ஆலயங்களில் 8 வது ஆலயம். சிவபெருமான் இத்தலத்தில் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் வேதத்தை...