அருள்மிகு இசக்கியம்மன் திருக்கோயில், அம்பத்தூர்

எழுதியவர்: தி.ஜெ.ரா

கோயிலின் சிறப்புகள்:

     இத்தலத்தில் அம்மன் இசக்கியம்மன் என்ற திருநாமத்துடன் வீற்றிருந்து அருள்புரிகிறாள். அன்னை பார்வதி உலகை இயக்குபவளாக இருப்பவள். அதனால், அவளுக்கு இயக்கி என்று பெயர். அப்பெயரே இசக்கி என மருவி இசக்கியம்மன் என்று அழைக்கப்படுகிறது. உக்ர தெய்வமான இசக்கியம்மன் இங்கு சாந்த கோலத்தில் அமைதியாக காட்சியளிக்கிறாள்.  இடக்கையில் குழந்தையும், வலக்கையில் திரிசூலமும் இருப்பது அவளின் கருணை, வீரத்தை வெளிப்படுத்துகிறது. குழந்தையை கையால் அரவணைத்து காப்பதுபோல, தன்னை நாடிவரும் அன்பர்களை அரவணைத்து அருள்புரிகிறாள். நீதிதெய்வமாக இருந்து தர்மத்தை நிலை நாட்டுவதன் அடையாளமாக தலையில் நெருப்புக்கிரீடம் தாங்கியிருக்கிறாள். கன்னியாகுமரி முப்பந்தல் இசக்கியம்மன் கோயில் மாதிரியிலும், தூத்துக்குடி வேம்படி இசக்கியம்மன் உருவ அமைப்பிலும் இக்கோயில் உருவாக்கப்பட்டுள்ளது. குழந்தை வரம் தருபவளாகவும், குழந்தைகளை நோய்நொடியிலிருந்து காப்பவளாகவும் இங்கு வீற்றிருக்கிறாள். இங்கு தமிழ் மந்திரம் சொல்லி வழிபாடு நடத்தப்படுகிறது. செவ்வாய், வெள்ளியன்று மாலை 6மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்படும். குழந்தைகள், பெண்கள் அம்மனுக்கு தாங்களே அபிஷேகம் செய்து வழிபடலாம். திருவள்ளுவர் மற்றும் ஒளவையாருக்கு இங்கு தனி சந்நிதிகள் இருப்பது சிறப்பாகும். 

பலன்கள்:

திருமண தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும் இங்கு பிரார்த்தனை செய்து பலனடையலாம் என்பது நம்பிக்கை. 

இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:

சென்னை அம்பத்தூரிலிருந்து செங்குன்றம் செல்லும் சாலையில் அம்பத்தூரிலிருந்து 3KM தொலைவில் கள்ளிகுப்பம் உள்ளது. கள்ளிகுப்பதில் ஓம் சக்தி நகரில் இக்கோயில் உள்ளது. மாநகரப் பேருந்துகள் உள்ளன. 

கோயில் திறந்திருக்கும் நேரம்:

காலை 6.00 மணி முதல் மதியம் 10.00 மணி வரை

மாலை 6.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை 

கோயில் முகவரி: 

அருள்மிகு இசக்கியம்மன் திருக்கோயில், ஓம் சக்தி நகர், கள்ளிகுப்பம், அம்பத்தூர், சென்னை – 600053

தொலைபேசி: 

98407 36575

இந்த பதிவை பகிர:

விரைவு இணைப்புகள்(Quick Links)

தொடர்புடைய பதிவுகள்

அருள்மிகு பத்ரகாளியம்மன் கோயில், அந்தியூர்

அருள்மிகு பத்ரகாளியம்மன் கோயில், அந்தியூர்

கோயிலின் சிறப்புகள்:       இத்தலத்தில் அம்மன் பத்ரகாளியம்மனாக வீற்றிருந்து அருள்புரிகிறாள். சுடர் விட்டு பரவும் ஜூவாலை கொண்ட தலை, மண்டை ஓடு கீரிடம், எட்டு கைகளில் உடுக்கை, கட்கம், கபாலம், சூலம், மகிஷனின் தலைமேல் கால் வைத்திருக்கும் பாவனை, விஸ்மய ஹஸ்தம் (செயற்கரிய...

அருள்மிகு நம்புநாயகி அம்மன் கோயில், இராமேஸ்வரம்

அருள்மிகு நம்புநாயகி அம்மன் கோயில், இராமேஸ்வரம்

கோயிலின் சிறப்புகள்:      இத்தலத்தில் அம்மன் நம்புநாயகி என்ற திருநாமத்துடன் வீற்றிருந்து அருள்புரிகிறாள். ஒரு சமயம் இத்தலத்தில் தட்சிணத்துருவன், பச்சிமத்துருவன் என்ற இரண்டு முனிவர்கள் கடுமையான தவம் மேற்கொண்டிருந்தனர். அவர்களது தவத்தை கண்டு மெச்சிய அம்மன் அவர்களுக்கு...

அருள்மிகு ஐயப்பன் கோயில், நங்கநல்லூர்

அருள்மிகு ஐயப்பன் கோயில், நங்கநல்லூர்

கோயிலின் சிறப்புகள்:      ஐயப்பன் தானே விரும்பி வந்து அமர்ந்த கோயில் இதுவாகும். சபரிமலை சன்னிதானம் எப்படி காட்சிக் கொடுக்கிறதோ அதே போன்ற வடிவிலேயே இங்கும் ஐயப்பன் சன்னிதி அமைந்துள்ளது. சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்னர் இப்பகுதியில் உள்ள பக்தர்களுக்கு குருசாமியாக...