அருள்மிகு நம்புநாயகி அம்மன் கோயில், இராமேஸ்வரம்

எழுதியவர்: தி.ஜெ.ரா

கோயிலின் சிறப்புகள்:

     இத்தலத்தில் அம்மன் நம்புநாயகி என்ற திருநாமத்துடன் வீற்றிருந்து அருள்புரிகிறாள். ஒரு சமயம் இத்தலத்தில் தட்சிணத்துருவன், பச்சிமத்துருவன் என்ற இரண்டு முனிவர்கள் கடுமையான தவம் மேற்கொண்டிருந்தனர். அவர்களது தவத்தை கண்டு மெச்சிய அம்மன் அவர்களுக்கு காளி தேவியாக காட்சி கொடுத்தாள். அன்றிலிருந்து இரண்டு முனிவர்களும் அந்த காட்டிலேயே காளியை வழிபட்டு வந்ததாகவும், அவளின் அருளால் பிணியுற்றவர்களுக்கு நோய்போக்கும் பணியை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இரண்டு முனிவர்களும் குறிப்பிட்ட காலத்திற்கு பின்பு கற்பகோடி காலம் கண்டவர்களாய் இப்பகுதியிலேயே ஆழ்ந்த நிஷ்டையில் சமாதியிலிருந்து வருவதாகவும் நம்பப்படுகிறது. இப்பகுதியை ஆண்டு வந்த சூலோதரன் என்ற மன்னன் இந்த காளியை நம்பி வேண்டி தன் நோய் நீங்கி நலமடைந்தான். அம்மனை நம்பி குணமடைந்ததால் அம்மன் நம்பு நாயகி என அழைக்கப் பெற்றாள். இக்கோயிலை சுற்றிலும் அமைந்துள்ள நண்ணீர் தடாகங்கள் பல்வேறு நோய்களை போக்கும் தன்மையுடையதாக விளங்குவதால் இவைகள் சர்வரோக நிவாரண தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. 

பலன்கள்:

தீராத நோய்களை உடையவர்களும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களும் இக்கோயிலிலேயே மாதக்கணக்கில் தங்கி சர்வரோக நிவாரண தீர்த்தத்தில் தினமும் நீராடி குணமடைகிறார்கள்.

இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:

ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி செல்லும் சாலையில் 2KM தொலைவில் இக்கோயில் உள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து நகரப் பேருந்துகள் உள்ளன. 

தங்கும் வசதி:

ராமேஸ்வரத்தில் ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன. 

 

கோயில் திறந்திருக்கும் நேரம்:

காலை 6.00 மணி முதல் மதியம் 11.00 மணி வரை

மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை 

கோயில் முகவரி: 

அருள்மிகு நம்புநாயகி அம்மன் திருக்கோயில், ராமேஸ்வரம் – 623 526.

இந்த பதிவை பகிர:

விரைவு இணைப்புகள்(Quick Links)

தொடர்புடைய பதிவுகள்

அருள்மிகு பத்ரகாளியம்மன் கோயில், அந்தியூர்

அருள்மிகு பத்ரகாளியம்மன் கோயில், அந்தியூர்

கோயிலின் சிறப்புகள்:       இத்தலத்தில் அம்மன் பத்ரகாளியம்மனாக வீற்றிருந்து அருள்புரிகிறாள். சுடர் விட்டு பரவும் ஜூவாலை கொண்ட தலை, மண்டை ஓடு கீரிடம், எட்டு கைகளில் உடுக்கை, கட்கம், கபாலம், சூலம், மகிஷனின் தலைமேல் கால் வைத்திருக்கும் பாவனை, விஸ்மய ஹஸ்தம் (செயற்கரிய...

அருள்மிகு மங்களநாதர் திருக்கோயில், உத்தரகோசமங்கை

அருள்மிகு மங்களநாதர் திருக்கோயில், உத்தரகோசமங்கை

கோயிலின் சிறப்புகள்:      இத்தலத்தில் இறைவன் மங்களநாதர் என்ற திருநாமத்துடன் அம்பாள் மங்களேஸ்வரியுடன் வீற்றிருந்து அருள்புரிகிறார்.  ராவணனின் மனைவியான மண்டோதரி ஒரு சிறந்த சிவபக்தனை மணம் முடிக்க வேண்டி சிவனை நோக்கி தவம் இருந்தாள். அவளுக்கு சிவன் காட்சியளித்து வரமளித்த...

அருள்மிகு இசக்கியம்மன் திருக்கோயில், அம்பத்தூர்

அருள்மிகு இசக்கியம்மன் திருக்கோயில், அம்பத்தூர்

கோயிலின் சிறப்புகள்:      இத்தலத்தில் அம்மன் இசக்கியம்மன் என்ற திருநாமத்துடன் வீற்றிருந்து அருள்புரிகிறாள். அன்னை பார்வதி உலகை இயக்குபவளாக இருப்பவள். அதனால், அவளுக்கு இயக்கி என்று பெயர். அப்பெயரே இசக்கி என மருவி இசக்கியம்மன் என்று அழைக்கப்படுகிறது. உக்ர தெய்வமான...