அருள்மிகு அபிராமேஸ்வரர் திருக்கோயில், திருவாமத்தூர்

இறைவன்: அபிராமேஸ்வரர், அழகியநாதர்
இறைவி: முக்தாம்பிகை
தீர்த்தம்: பாம்பை ஆறு
பாடியோர்:  அப்பர், சம்பந்தர், சுந்தரர்

கோயிலின் சிறப்புகள்:

         தேவார பாடல் பெற்ற நடு நாட்டு ஆலயங்களில் 21 வது ஆலயம். ஒரு காலத்தில் கொம்பு இல்லாமல் அவதி பட்ட பசுக்களுக்கு இறைவன் கொம்பு கொடுத்த தலம். இது பசுக்களின் தாய் ஊர் எனப்படும். மூலவரின் மேல் பசுவின் கால் குளம்பும் பால் சொரிந்த அடையாளமும் உள்ளது. இந்த இறைவனுக்கு அபிராமேஸ்வரர் என்ற பெயரும் உண்டு. இறைவனுக்கும் இறைவிக்கும் தனி தனி கோயில். அம்மன் கோயில் பிரகார சுற்றில் ஒரு வட்ட பாறையும் சிவலிங்கமும் உள்ளது இந்த பாறையின் முன் ராமனும் சுக்ரீவனும் ராவணனை அழிக்க ஹனுமானை சாட்சியாக கொண்டு உடன் படிக்கை செய்த சன்னதி. இங்கு பொய் கூறுவோர் பாம்பு தீண்டபெறுவார்கள். இறைவியால் சபிக்கப்பட்ட பிருங்கி முனிவர் வன்னி மரமாகி சாபம் நீங்கப்பெற்ற இடம். திருமண தடை,  குழந்தை பேறு இல்லாமை போன்ற குறைபாடு நீங்க இறைவியை வழிபடுகிறார்கள்.

தேவாரம்:   

பாடுவான் பாடுவான் பார்ப்பதி தன்அடி பற்றி நான்
தேடுவன் தேடுவன் திண்னெனப் பற்றிச் செறிதர
ஆடுவன் ஆடுவன் ஆமாத்தூர் எம் அடிகளைக்
     கூடுவன் கூடுவன் குற்றமதர்றேன் குறிபொடே

இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:

விழுப்புரம் செஞ்சி சாலையில் விழுப்புரத்திலிருந்து 6 கி.மீ. தொலைவில் இக்கோயில் உள்ளது. விழுப்புரத்திலிருந்தும், செஞ்சியிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன.

தங்கும் வசதி:

விழுப்புரத்தில் தங்கி அங்கிருந்து செல்லலாம். விழுப்புரத்திலிருந்து பேருந்துகள் உள்ளன. 

கோயில் திறந்திருக்கும் நேரம்:

காலை 7.00 – 12.00 மற்றும் மாலை 5.00 – 8.00

கோயிலின் முகவரி:

அருள்மிகு அபிராமேஸ்வரர் திருகோயில், திருஆமத்தூர் அஞ்சல், விழுப்புரம் மாவட்டம் 605402.

தொலைபேசி:

கே. அருணாச்சல சிவாச்சாரியார் 04146 – 223319, 223379,  9843066252

இந்த பதிவை பகிர:

விரைவு இணைப்புகள்(Quick Links)

தொடர்புடைய பதிவுகள்

அருள்மிகு  வாய்மூர்நாதர் திருக்கோயில், திருவாய்மூர்

அருள்மிகு வாய்மூர்நாதர் திருக்கோயில், திருவாய்மூர்

இறைவன்: வாய்மூர்நாதர்     இறைவி: பாலின் நன்மொழியாள்  தீர்த்தம்: சூரிய தீர்த்தம்   பாடியோர்: அப்பர், சம்பந்தர் கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 124 வது ஆலயம்.  விடங்கர் எழுந்தருளியிருக்கும் தலங்கள் 7ல் ஒன்று. இவர் நீலவிடங்கர்,...

அருள்மிகு மனத்துணைநாதர் திருக்கோயில், வலிவலம்

அருள்மிகு மனத்துணைநாதர் திருக்கோயில், வலிவலம்

இறைவன்: மனத்துணைநாதர்     இறைவி: மாழையொண்கண்ணி தீர்த்தம்: காரணர்கங்கை  பாடியோர்: அப்பர், சம்பந்தர், சுந்தரர்  கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 121 வது ஆலயம். இது வலியன் பூசித்த தலமாதலின் இப்பெயர்பெற்றது. வலியன் என்பது...

அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருக்குவளை

அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருக்குவளை

இறைவன்: பிரம்மபுரீஸ்வரர்      இறைவி: வண்டமர்பூங்குழலி  தீர்த்தம்: சந்திர நதி, பிரம்ம தீர்த்தம்  பாடியோர்: அப்பர், சம்பந்தர், சுந்தரர்  கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 123 வது ஆலயம்.  ஆதியில் பிரமன் சிருஷ்டி தொழிலைப்...