இறைவன்: | ஐராவதேஸ்வரர் |
இறைவி: | சுகந்தகுந்தளாம்பிகை அம்மன் |
தீர்த்தம்: | ஐராவதம் |
பாடியோர்: | சுந்தரர் |
கோயிலின் சிறப்புகள்:
தேவார பாடல் பெற்ற காவிரி வடகரை ஆலயங்களில் 24 வது ஆலயம். மணக்கோலத்துடன் வந்த அன்பனான அரசகுமாரன் ஒருவனை இறைவர் மாமனாராக எதிர்கொண்டு அழைத்துச்சென்ற காரணத்தால் இப்பெயர் வந்தது என்பர். இத்தலத்தில் ஐராவதம் பூசித்துப் பேறு எய்தியது. நடைமுறையில் “மேலக் கோயில்” என்றே வழங்கப்படுகின்றது. இங்கிருந்து 2 கீ.மீ. தூரத்தில் உள்ள திருமணத்திற்கு வேண்டிக்கொள்ளும் திருமணஞ்சேரி என்றதலம் உள்ளது. இங்கு சித்திரை மாதம் திருக்கல்யாணஉத்சவம் நடைபெறும்போது இறைவன் மாப்பிள்ளை கோலத்தில் இங்கு எழுந்து அருளுவார். இங்குள்ள சிவாச்சாரியார் அவரை மணமகளின் தந்தையாக பாவித்து இறைவனை பூரண கும்ப மரியாதையை குடுத்து சீரும் கொடுத்து பெருமை செய்வார். பின்புதான், இறைவன் திருமணஞ்சேரிக்கு சென்று திருமணம் செய்துகொள்வார்.
தேவாரம்:
மத்த யானை யேறி மன்னர் சூழ வருவீர்காள்
செத்த போதில் ஆரு மில்லை சிந்தையுள் வைம்மின்கள்
வைத்த உள்ளம் மாற்ற வேண்டா வம்மின் மனத்தீரே
அத்தர் கோயில் எதிர்கொள்பாடி யென்ப தடைவோமே
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 10.கி.மீ. தொலைவில் உள்ள குத்தாலத்திலிருந்து 5.கி.மீ. தொலைவில் இக்கோயில் உள்ளது. குத்தாலத்திலிருந்து ஆட்டோவில் செல்லலாம்.
தங்கும் வசதி:
மயிலாடுதுறையில் தங்கி அங்கிருந்து செல்லலாம்.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 7.00 – 11.00 மற்றும் மாலை 5.00 – 8.00
கோயிலின் முகவரி:
அருள்மிகு ஐராவதேஸ்வரர் திருக்கோயில், மேல திருமணஞ்சேரி (எதிர்கொள்பாடி), குத்தாலம் வழி , மயிலாடுதுறை மாவட்டம் 609813.
தொலைபேசி:
துரையப்ப குருக்கள்: 04364 – 234223, 235487, 9442902785