இறைவன்: |
அறத்துறைநாதர் |
இறைவி: |
ஆனந்தநாயகி |
தீர்த்தம்: |
வெள்ளாறு |
பாடியோர்: |
சம்பந்தர், அப்பர், சுந்தரர் |
கோயிலின் சிறப்புகள்:
தேவார பாடல் பெற்ற நடு நாட்டு ஆலயங்களில் 1 வது ஆலயம். ஏழு துறை ஆலயங்களில் இது முக்கியமான ஆலயம்.இந்த ஆலயம் நிவா எனப்படும் வெள்ளாற்றின் வடகரையில் உள்ளது. சம்பந்தருக்கு முத்து சிவிகை, முத்துக்குடை அருளிய தலம்.
இறைவன் சுயம்பு மூர்த்தி. எட்டு திருமகள் உருவங்களும் மற்றும் மாடங்களில் உள்ள அற்புதமான சிற்பங்களும் காண அற்புதமான ஆலயம்.
வேண்டியதை கொடுக்கும் இறைவன். சுவாமி, அம்பாளுக்கு புது வஸ்திரம் சாத்தி வழிபடுகிறார்கள்.
தேவாரம்:
நீலமாமணி மிடற்று நீறணி சிவனெனப் பேணும்
சில மாந்தர்கட் கல்லாற் சென்று கை கூடுவதன்றால்
கோல மாமலருந்திக் குளிர்புனல் நிவாமல்கு கரைமேல்
அழுந்துஞ் சோலை நெல்வாயிலரத்துறையடிகள் தம் அருளே
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
பெண்ணாடம் புகை வண்டி நிலையத்துக்கு தென்மேற்கே 5 கி.மீ. தூரத்திலும்
விருத்தாசலத்திலிருந்து 22 கி .மீ. தூரத்தில் திட்டக்குடி பாதையில் கோடிகலம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து 3 கி .மீ. தொலைவிலும் இக்கோயில் உள்ளது.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 6.00 – 11.00 மற்றும் மாலை 6.00 – 8.00
கோயில் முகவரி:
அருள்மிகு அரத்துறைநாதர் திருகோயில், திருவட்டதுறை & அஞ்சல், திட்டக்குடி வட்டம், விருத்தாசலம் வழி, கடலூர் மாவட்டம். 606111.
தொலைபேசி:
எஸ்.சாமினாதகுருக்கள் – 04143 – 246303